பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
மோட்டோ, நோக்கியா போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது போக்கோ நிறுவனம். இந்நிலையில் போக்கோ நிறுவனம் புதிய போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வரும் பிப்ரவரி 6-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஹர்திக் பாண்டியா
இந்த போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக கிரக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கையில் போக்கோ எக்ஸ்5 ப்ரோ 5ஜி வைத்திருப்பது போன்று ஒரு டீசர் வெளியிடப்பட்டது. மேலும் போக்கோவின் பிராண்ட் தூதராக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

பவர் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர்
POCO X5 Pro 5G ஸ்மார்ட்போன் மஞ்சள் நிற மாறுபாட்டில் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பவர் பட்டன் மற்றும் கைரேகை ஸ்கேனர் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் காண முடிகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
தரமான சிப்செட்
போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரிபிள் ரியர் கேமரா
இந்த புதிய போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன்.
ஃபுல் எச்டி டிஸ்பிளே
அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் டால்பி விஷன் ஆதரவு, எச்டிஆர் ஆதரவு, 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
பேட்டரி எப்படி?
இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5500 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த போக்கோ போன் அறிமுகமாகும். எனவே சில நிமிடங்களில் இந்த போனை சார்ஜ் செய்துவிட முடியும்.
இயங்குதளம்?
குறிப்பாக இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸ் இல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ போன் வெளிவரும். அதேபோல் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








