கில்லாடி போக்கோ: அசத்தலான 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்.. எப்போது அறிமுகம்.!

|

போக்கோ நிறுவனம் ஆரம்பம் முதல் 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதாவது மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது போக்கோ நிறுவனம்.

போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி

போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி

இந்நிலையில் போக்கோ நிறுவனம் மீண்டும் அதே பட்ஜெட் விலையில் போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி சிறந்த வடிவமைப்பு மற்றும் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கிருந்து வருகிறது? 40 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத மர்ம ஒளி! ஒருவழியாக விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பதில்!எங்கிருந்து வருகிறது? 40 ஆண்டுகளாக கண்டுபிடிக்கப்படாத மர்ம ஒளி! ஒருவழியாக விஞ்ஞானிகளுக்கு கிடைத்த பதில்!

போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி

புதிய போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மாடல் எண் 22101320I என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.8,999க்கு விற்கிறீங்களே கம்பெனிக்கு கட்டுமா பாஸ்: உச்ச அம்சங்கள் உடன் அறிமுகமான Infinix Hot 20 Play!ரூ.8,999க்கு விற்கிறீங்களே கம்பெனிக்கு கட்டுமா பாஸ்: உச்ச அம்சங்கள் உடன் அறிமுகமான Infinix Hot 20 Play!

ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட்

போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 782ஜி சிப்செட் வசதியுடன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர இந்த ஸ்னாப்டிராகன்சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேரமும் உங்கள் Mobile Data On-ல் உள்ளதா? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?24 மணி நேரமும் உங்கள் Mobile Data On-ல் உள்ளதா? இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் 1080 பிக்சலஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

விரைவில் அறிமுகமாகும் போக்கோ எஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், ட்ரிபிளர் ரியர் கேமரா ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போக்கோ ஸ்மார்ட்போன்.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஆப்பிள் வாட்ச் கூட தள்ளி தான் நிக்கனும் போல: அட்டகாச அம்சங்களுடன் Amazfit ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!ஆப்பிள் வாட்ச் கூட தள்ளி தான் நிக்கனும் போல: அட்டகாச அம்சங்களுடன் Amazfit ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.!

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20:9 என்ற திரைவிகிதம், கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 619 ஜிபியு வசதியும் உள்ளது. பின்பு MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

Samsung கிட்ட இருந்து இந்த 1 போனை மட்டும் வாங்கிடாதீங்க! ஒருவேளை ஏற்கனவே வாங்கிட்டா மனச தேத்திக்கோங்க!Samsung கிட்ட இருந்து இந்த 1 போனை மட்டும் வாங்கிடாதீங்க! ஒருவேளை ஏற்கனவே வாங்கிட்டா மனச தேத்திக்கோங்க!

64எம்பி Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார்

64எம்பி Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார்

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி Samsung ISOCELL GW3 பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டபல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
POCO X5 Pro 5G phone to launch soon with Snapdragon 782G Plus chipset: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X