Home
Mobile

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை அறிமுகம் செய்தது போக்கோ: விற்பனை தேதி இதுதான்.!

போக்கோ நிறுவனம் இந்தியாவில் புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்ப்போம்.

புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1,080 x 2,400 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பெரிய டிஸ்பிளே என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை அறிமுகம் செய்தது போக்கோ.!

இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த போனுக்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகண்டரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர கேமரா வசதி உள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை அறிமுகம் செய்தது போக்கோ.!

இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி கொண்டுள்ளது. எனவே இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 188 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

பட்ஜெட் விலையில் புதிய 5G போனை அறிமுகம் செய்தது போக்கோ.!

அதாவது இந்த 6ஜிபி ரேம் கொண்ட போக்போ எக்ஸ்5 5ஜி போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக 6ஜிபி ரேம் கொண்ட மாடலை ரூ.16,999-விலையில் வாங்க முடியும். பின்பு 8ஜிபி ரேம் கொண்ட போக்கோ எக்ஸ்5 5ஜி மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுக சலுகையாக இந்த 8ஜிபி மாடலை ரூ.18,999-விலையில் வாங்க முடியும்.மேலும் இந்த புதிய போன் வரும் மார்ச் 21-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco X5 5G With 6.67-Inch Display Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X