ஸ்னாப்டிராகன் சிப்செட், 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் புதிய போக்கோ 5ஜி போன்.!
போக்கோ நிறுவனம் தற்போது போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது. இந்த புதிய போன் விரைவில் அறிமுகமாகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அம்சங்கள் தற்போது பிஐஎஸ் இந்தியா மற்றும் எஃப்சிசி போன்ற வலைத்தளங்களில் வெளிவந்துள்ளது.

67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங்
அதன்படி இந்த புதிய போக்கோ போன் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது போக்கோ நிறுவனம். மேலும் இந்த சாதனத்தின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் சிப்செட்
Poco X5 5G ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் சிறந்த செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் 778ஜி+ சிப்செட். எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

5000 எம்ஏஎச் பேட்டரி
குறிப்பாக போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவரும். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் ஏற்கனவே கூறியபடி இந்த போனில் 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் உள்ளது.

டர்பிள் ரியர் கேமரா
குறிப்பாக 64எம்பி டர்பிள் ரியர் கேமராவுடன் இந்த புதிய போக்கோ போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.

128ஜிபி ஸ்டோரேஜ்
6ஜிபி/8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த புதிய போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
போக்கோ எக்ஸ்5 5ஜி ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி ஆதரவு
பின்பு 5ஜி ஆதரவு, டூயல்-பேண்ட் வைஃபை,ஜிபிஎஸ், என்எப்சி, ஹெட்போன் ஜாக், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய போக்கோ போன். கண்டிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications