Home
Mobile

கொத்தா ஆஃபர்.. வெறும் ரூ.16,240 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த போன்?

போகோ பிராண்டில் பட்ஜெட் விலை 5ஜி போனுக்கு காத்திருக்கும் பிரியர்களுக்கு நல்ல நேரம் வந்துவிட்டது. அமேசான் டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.16,240க்கு சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 1 டிபி மெமரி, ஏஐ கேமரா போன்ற அம்சங்கள் வருகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

போகோ எக்ஸ்5 அம்சங்கள் (POCO X5 Specifications): இந்த போன் பட்ஜெட் விலையில் பட்டையை கிளப்பும் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) மாடலாகும். இதில் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ரூ.16240 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா பிரியர்களை கவரும்படி டிரிபிள் ரியர் செட்டப் (Triple Rear Setup) கொண்டிருக்கிறது. ஆகவே, 48 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவோடு எல்இடி பிளாஷ் (LED Flash) இடம்பெற்றுள்ளது.

இதுவொரு ஏஐ கேமராவாகும். அதேபோல 13 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போகோ எக்ஸ்5 போனில் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் (Android 12 OS) மற்றும் எம்ஐயுஐ 13 ஓஎஸ் (MIUI 13 OS) வருகிறது. அதோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 6என்எம் 5ஜி எஸ்ஓசி (Qualcomm Snapdragon 695 6nm 5G SoC) சிப்செட் கொண்டுள்ளது.

கேமிங் பிரியர்களுக்கு ஏற்றபடி அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போகோ போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும், 1 டிபிக்கான ஸ்டோரேஜ் சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, டூயல் சிம் சிலாட் மற்றும் எஸ்டிகார்டு சிலாட் இடம்பெற்றிருக்கிறது.

ரூ.16240 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 5000mAh பேட்டரி போன்!

இந்த போகோ எக்ஸ்5 போனில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியோடு சேர்த்து, இந்த போன் 188 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த மாடலுக்கு IP53 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust/Splash Resistant ) கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த போனில் சிங்கிள் பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர்கள் (single bottom-ported speaker) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted fingerprint sensor) வருகிறது. அதேபோல இன்பிராரெட் சென்சார் (Infrared sensor) மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. இதுவொரு 5ஜி போன் என்பதால் 5ஜி எஸ்ஏ மற்றும் என்எஸ்ஏ கனெக்விட்டி வருகிறது.

மேலும், டூயல் 4ஜி வோஎல்டிஇ, ப்ளூடூத் 5.1 மற்றும் ஜிபிஎஸ் போன்ற அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போனில் ஜாகுவார் பிளாக் (Jaguar Black), வைல்டுகேட் ப்ளூ (Wildcat Blue) மற்றும் சூப்பர்நோவா கிரீன் (Supernova Green) ஆகிய மூன்று கலர்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.17,490ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலையில் அமேசான் (Amazon) தளத்தில் அட்டகாசமான தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. இந்த போகோ எக்ஸ்5 5ஜி போனை எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு (HDFC Bank Credit Card) பயன்படுத்தி வாங்கினால், ரூ.1,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை வெறும் ரூ.16,240க்கு வாங்கிகொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
POCO X5 5G Sale With 30 Percent Discount on Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X