Home
Mobile

108எம்பி கேமராவுடன் விரைவில் களமிறங்கும் அசத்தலான போக்கோ எக்ஸ்4 ப்ரோ.!

போக்கோ நிறுவனம் இந்த மாதம் இறுதியில் புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ

போக்கோ எக்ஸ்4 ப்ரோ

போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ

போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போ

இந்த புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256 உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட்

போக்கோ எக்ஸ்4 ப்ரோ ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உடன் அட்ரினோ 619ஜிபியு ஆதரவு உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதேபோல் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்4 ப்ரோ மாடல். மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜிஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின்

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் என இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் மிகவும்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் Dimensity 810 சிப்செட் உடன் மாலி ஜி57 எம்சி2 ஜபியு ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும்MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனில் 5000

போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Poco X4 Pro May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X