ஏப்ரல் 10: இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்.!
போக்கோ நிறுவனத்தின் புதிய போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஏப்ரல் 10-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஆனது ஏற்கனவே பிப்ரவரி மாத இறுதியில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2022 இல் உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்ட முதல் போக்கோ ஸ்மார்ட்போன் ஆகும். போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மற்றும் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. மேலும் இந்தஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி விவரக்குறப்புகள் குறித்து பார்க்கையில், போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 1,080 x 2,400 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 360 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதம் மற்றும் 1200 நிட்ஸ் உச்ச பிரகாசத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.67-இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி வரை ரேம் மற்றும் 11 ஜிபி வரை டைனமிக் ரேம் விரிவாக்க ஆதரவை இது கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக 1 டிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவைக் கொண்டிருக்கிறது. போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 108-மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவை என மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 16 மெகாபிக்சல் முன்புற செல்பி கேமராவை கொண்டிருக்கிறது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் 5,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, இது 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது. அது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு, 8 ஜிபி ரேம்மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு ஆகும்.

குறிப்பாக 6ஜிபி ரேம் கொண்ட போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.19,200-விலையிலும், 8ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.29,300-விலையிலும் அறிமுகம்செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications