போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
கடந்த ஆண்டு போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சாதனம் எம்.ஐ.யு.ஐ. 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் உடன் அறிமுகமானது. இந்நிலையில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனுக்கு தற்போது ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளதாக
தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக போக்கோ எக்ஸ்3 மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் V12.0.2.0.RJGINXM எனும் பில்டு நம்பர் கொண்டிருக்கிறது. தற்போது இந்த அப்டேட் ஸ்டேபில் பீட்டா முறையில் வழங்கப்படுகிறது என்றும், இதனால் அனைவருக்கும் கிடைக்க சில காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. கண்டிப்பாக இந்த அப்டேட் போக்கோ எக்ஸ்3 வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும்.
இந்த போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் கொண்ட 1080 × 2400 பிக்சல்கள் உடைய டிஸ்ப்ளேவுடன், எச்டிஆர் 10, கார்னிங் கொரில்லா 5 பாதுகாப்புடன் வருகிறது. இது 240Hz தொடு மாதிரி விகிதத்துடன் 120Hz புதுப்பிப்பு வீதக் காட்சியைக் கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதியுடன் அட்ரினோ 618 ஜி.பீ.யு ஆதரவும் உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்
போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சோனி ஐஎம்எக்ஸ் 682 சென்சார், 13 மெகாபிக்சல் 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் 4cm மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில், செல்ஃபி எடுக்க 20 மெகாபிக்சல் சென்சார் கொண்ட பஞ்ச் ஹோல் கட்அவுட் செல்பி கேமரா வைக்கப்பட்டுள்ளது.
போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இவற்றுள்
அடக்கம்.

4 ஜி வோல்ட்இ, வைஃபை, ஏ-ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்இ கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.15,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications