Home
Mobile

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் போலயே: அசத்தலான அம்சம்.!

போக்கோ நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன் மாடலும் தரமான அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு, பட்ஜெட் விலை என அனைத்து வகையிலும் சிறந்ததாக இருக்கிறது என்றே கூறலாம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் போலயே: அசத்தலான அம்சம்

இந்நிலையில் போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலை வரும் மார்ச் 30-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடல் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் போக்கோ நிறுவனம் சார்பில் ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால், போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் மிகவும் எதிர்பார்த்த கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே சிறந்த டிஸ்பிளே பாதுகாப்பை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பல்வேறு மக்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ டிஸ்பிளே அவ்வளவு எளிதில் உடைந்து விடாது. மேலும் ஆன்லைனில் ஏற்கனவே வெளியான இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

போக்கோ நிறுவனத்தின் போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வரும் என கூறப்படுகிறது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் போலயே: அசத்தலான அம்சம்

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்றுகூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, அல்டராவைடு லென்ஸ், மேக்ரோ சென்சார் மற்றும் ஆழமான சென்சார் கொண்ட கேமரா வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5200 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் போலயே: அசத்தலான அம்சம்

மேலும் இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 சிப்செட் வசதி இடம்பெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இந்த சிப்செட் வசதி இடம்பெறும் வகையில், கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களை மிக அருமையாக பயன்படுத்த முடியும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடல் 5200 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்பதால் அதிக நேரம் இணையம், வீடியோ கேம், ஆப் போன்றவை பயன்படுத்த முடியும். பின்பு விரைவில் சார்ஜ் செய்ய 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவறுள்ள அடக்கம் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Frost Blue, Metal Bronze, Phantom Black போன்ற நிறங்களில் இந்த புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்பு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் போலயே: அசத்தலான அம்சம்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.21,600-விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடல் ரூ.26,000-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்3 மாடலின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2340 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் போலயே: அசத்தலான அம்சம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு இந்த போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாதனம். அதாவது மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம் போலயே: அசத்தலான அம்சம்

போக்கோ எம்3 ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Poco X3 Pro with Gorilla Glass 6 Launching in India on March 30: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X