இருந்தாலும் இப்படி இருந்தா நல்லா இருக்கும்: குறைந்தவிலையில் 8ஜிபி ரேம் உடன் வரும் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ!
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 26 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் வியட்நாமின் சில்லறை விற்பனையாளர் மூலம் வெளியாகியுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள்
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் வியட்நாமின் சில்லறை விற்பனையாளர் மூலம் கசிந்துள்ளது. இந்த தகவலின் உண்மைத்தன்மை குறித்த அறிவிப்பு எதுவுமில்லை இருப்பினும் வெளியான தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் ஆரம்ப விலை இந்திய மதிப்புப்படி ரூ.21,700 முதல் ரூ.23,300 ஆக இருக்கலாம் என தெரிகிறது. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மார்ச் 26 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

மார்ச் 26 வெளியாகும் போக்கோ எக்ஸ் 3 ப்ரோ
மார்ச் 26 இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கும் என கூறப்படும் நிலையில் அதற்கு முன்பாகவே இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள் ரெண்டர்கள் ஆன்லைன் தளத்திலும் வெளியாகியுள்ளன. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ வெளியீடு மெய்நிகர் நிகழ்வு மூலம் நடைபெறும் எனவும் இதை போக்கோ ஹோஸ்ட் செய்யும் எனவும் கூறப்படுகிறது. போக்கோ எக்ஸ்3 ப்ரோ இம்மாத இறுதியில் இந்தியாவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவல்
இந்த ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவலை கேட்ஜெட் 360 வெளியிட்டுள்ளது. டிப்ஸ்டர் வியட்நாமிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் மூலம் போக்கோ எக்ஸ் 3 குறித்த தகவல் டுவிட் செய்யப்பட்டுள்ளது. அந்த நபரின் பெயர் @chunvn8888 என இருக்கிறது. இதில் வரவருக்கும் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் கசிந்துள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ குறித்து டிப்ஸ்டர் வெளியிட்ட விவரங்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.25,200 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.21,700 முதல் ரூ.23,300 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 26 முதல் விற்பனைக்கு வரக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்கள்
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று தனித்துவமான வண்ண விருப்பங்களில் வரக்கூடும். போக்கோ எக்ஸ் 3 ப்ரோ சாதனத்தில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் உடன் வருகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா
போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் ஆகிய வேரியண்ட்களிலும் 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மூலம் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1டிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. போக்கோ எக்ஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 20 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கும்.

இணைப்பு ஆதரவு விருப்பங்கள்
இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில் இது 4ஜி எல்டிஇ, வைஃபை802, ப்ளூடூத் 5.0 இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் அனைத்தும் தகவலே, உண்மை அம்சங்கள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விவரக்குறிப்புகள் முன்னதாக ஐரோப்பிய சில்லறை விற்பனையாளரால் வெளியிட்ட தகவலோடு ஒத்துப்போகிறது என கூறப்படுகிறது.
File Images


Click it and Unblock the Notifications