மார்ச்: ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.!
போக்கோ நிறுவனம் வரும் மார்ச் மாதம் புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை மார்ச் மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 64எம்பி பிரைமரி கேமரா, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.மேலும் இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எக்ஸ்3 சாதனத்தின் அம்சங்களைப் பார்ப்போம்.

Poco X3 ஸ்மார்ட்போன், 6.67' இன்ச் கொண்ட 1080 × 2400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்துடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
போக்கோ X3 அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Poco X3 ஸ்மார்ட்போனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

Poco X3 ஸ்மார்ட்போனில், லிக்விட் கூல் டெக்னாலஜி 1.0 பிளஸுடன் 70% பெரிய ஹீட் பைப்களுடன் வருகிறது, இது Poco X3 ஸ்மார்ட்போன் சாதனத்தை 6 டிகிரி வரையில் குளிர்விக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Poco X3 ஸ்மார்ட்போன், குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 13 மெகாபிக்சல் கொண்ட 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட 4cm மேக்ரோ
சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் அனுபவத்திற்காக 20 மெகாபிக்சல் கேமரா பஞ்ச் ஹோல் நாட்ச் கட்அவுட் டிசைனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.
போக்கோ X3 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய MIUI 12.0.1 மூலம் இயங்குகிறது. இந்த சாதனம் 6000 mAh பேட்டரியுடன் கூடிய 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கைரேகை ஸ்கேனர் Poco X3 ஸ்மார்ட்போனில் சைடில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ் மதிப்பீட்டைக் பெற்றுள்ளது.

புதிய Poco X3 ஸ்மார்ட்போனின், இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது. இந்தியாவில் போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன், 5160mAh பேட்டரி சக்திக்கு பதிலாக 6000 எம்ஏஎச் பேட்டரி சக்தியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications