ரூ.18,999-விலையில் இன்று விற்பனைக்கு வரும் போக்கோ எக்ஸ்3 ப்ரோ.! முழு விவரம்.!
போக்கோ நிறுவனம் இன்று தனத போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக் கொண்டுவருகிறது. குறிப்பாக இந்த சாதனத்தை பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸமார்ட்போனை வாங்கினால் ரூ.1000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.

6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1080 x 2400 பிக்சல் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சஙகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த 7 என்எம் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர் உடன் அட்ரினோ 640 ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு அருமையாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி/8ஜிபி ரேம்
போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடலில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

5160 எம்ஏஎச் பேட்டரி
புதிய போக்கோ எக்ஸ்3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5160 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், டூயல் ஸ்பீக்கர் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் கோல்டன் ப்ரான்ஸ், கிராஃபைட் பிளாக் மற்றும் ஸ்டீல் ப்ளூ நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த போக்கோ எக்ஸ்3 ப்ரோ மாடல்.


Click it and Unblock the Notifications