Home
Mobile

புதிய போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.! ரூ.7,999 முதல்...

போக்கோ நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய சந்தையில் தனித்துவம் பெற்று ஒரு ஆண்டு
நிறைவுற்றதை கொண்டாடுகிறது போக்கோ நிறுவனம்.

 போக்கோ Anniversary Sale

போக்கோ Anniversary Sale

எனவே இதை முன்னிட்டு போக்கோ Anniversary Sale தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தில் நடைபெற்று வருகிறது. அதாவது பிப்ரவரி 4-ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனை மூன்று நாட்களுக்கு நடைபெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல வரவேற்ப்பு உள்ளது

குறிப்பாக போக்கோ ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். எனவே இந்த சிறப்பு விற்பனையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரீபெயிட் பரிமாற்றங்களுக்கு

மேலும் இந்த சிறப்பு விற்பனையில் போக்கோ எக்ஸ்3, போக்கோ எம்2 மற்றும் போக்கோ சி3 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேபோல் போக்கோ எக்ஸ்3 அனைத்து வேரியண்ட்களின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டுள்ளது. பின்பு பிரீபெயிட் பரிமாற்றங்களுக்கு ரூ.500 தள்ளுபடி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது சலுகை விலையில் கிடைக்கும் போக்கோ ஸ்மார்ட்போன்களின் விவரங்கள்

இப்போது சலுகை விலையில் கிடைக்கும் போக்கோ ஸ்மார்ட்போன்களின் விவரங்கள்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,499
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,499
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,499
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,499
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.10,499
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999

போக்கோ எக்ஸ்2

அண்மையில் போக்கோ நிறுவனம் அறிவித்த தகவலின்படி, போக்கோ எக்ஸ்2 மற்றும் போக்கோ எக்ஸ்3 மாடல்களின் முறையே பத்து லட்சத்திற்கு அதிக யூனிட்கள் விற்பனையாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் சிறந்த மென்பொருள் வசதி மற்றும் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவருவதால் நல்ல வரவேற்பை பெறுகிறது.

Best Mobiles in India

English summary
Poco X3, Poco M2 and Poco C3 Price Slashed in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X