நாளை அறிமுகமாகும் Poco X3 இல் 6000 எம்ஏஎச் பேட்டரியா?

|

Poco X3 ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி (நாளை) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பட்டியல் மற்றும் நிறுவனத்தின் ட்விட்டர் இடுகை வழியாக இந்த உறுதிப்படுத்தல் வெளிவந்துளளது. இதன்படி, போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன், செப்டம்பர் 22 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6000 எம்ஏஎச் பேட்டரியா?

6000 எம்ஏஎச் பேட்டரியா?

போகோ இந்தியா பகிர்ந்த 10 விநாடி டீஸர் வீடியோ, ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புறத்தைக் காட்டுகிறது, குவாட் ரியர் கேமரா மற்றும் செல்பி கேமரா அமைப்பிற்கான பஞ்ச் ஹோல் வடிவமைப்பும் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போகோ எக்ஸ்3 ஸ்மார்ட்போன் 5160mAh பேட்டரி சக்திக்கு பதிலாக 6000 எம்ஏஎச் பேட்டரி சக்தியுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 என்எப்சி ஸ்மார்ட்போன்

போக்கோ எக்ஸ் 3 என்எப்சி ஸ்மார்ட்போன்

போக்கோ எக்ஸ் 3 என்எப்சி ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் மாடல் சமீபத்தில் € 199 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ. 14,620 என்ற விலையை நெருங்கும். இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் தோராயமாக ரூ. 18,290 என்ற விலையில் ஷாடோ க்ரெய் மற்றும் கோபால்ட் ப்ளூ நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

இந்தியாவில் என்ன விலை எதிர்பார்க்கலாம்?

இந்தியாவில் என்ன விலை எதிர்பார்க்கலாம்?

சமீபத்திய தகவல்படி, இந்தியாவில் போகோ எக்ஸ் 3 8ஜிபி வேரியண்ட் மாடலிலும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் செப்டம்பர் 22ம் தேதி அறிமுகமாகும் போகோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் ரூ. 18,999 அல்லது ரூ. 19,999 என்ற விலைக்குள் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது.

திறன் மற்றும் சிறப்பம்சம்

திறன் மற்றும் சிறப்பம்சம்

போக்கோ எக்ஸ் 3 என்எப்சி, 6.67' இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்தை ஆதரிக்கும். குவால்காமின் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்னாப்டிராகன் 732 ஜி செயலியுடன், அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் வந்த உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

100% சார்ஜ் சில நிமிடங்களில்

100% சார்ஜ் சில நிமிடங்களில்

இந்த ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை சேமிப்புடன் வருகிறது, இது 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது. இது அண்ட்ராய்டு 10 இல் MIUI 12.0.1 உடன் இயங்குகிறது, மேலும் இது 6000mAh பேட்டரியை 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் பேக் செய்கிறது, இது 30 நிமிடங்களில் 62% வரை மற்றும் 65 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Poco X3 may have a 6000 mAh battery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X