போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போன் அறிமுகம்: இதோ டாப் 5 அம்சங்கள்.!

|

போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த அசத்தலான சாதனம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் முக்கியமான 5 அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்

#1

#1

போக்கோ எக்ஸ்3 ஜிடி சாதனம் ஆனது 5ஜி ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் வைஃபை 6, புளூடூத் வி 5.2, ஜி.பி.எஸ் மற்றும்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு பல்வேறு சென்சார் வசதியை கொண்டுள்ளது
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

#2

#2

இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. எனவே இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ஆன்லைனில் இனி யாரும் உங்களைக் கண்காணிக்க முடியாது.. ஆண்ட்ராய்டின் புதிய பாதுகாப்பு அம்சம் இது தான்..ஆன்லைனில் இனி யாரும் உங்களைக் கண்காணிக்க முடியாது.. ஆண்ட்ராய்டின் புதிய பாதுகாப்பு அம்சம் இது தான்..

#3

#3

போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 1100 SoC சிப்செட் வசதி உள்ளது.எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு Mali-G77 GPU ஆதரவு மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய சாதனம்.

கண்ணால் காண்பது பொய்., கேமராவால் ஆராய்வதே மெய்- டோக்கியோ ஒலிம்பிக்கில் Nikon கேமராக்களின் அதீத பங்கு!கண்ணால் காண்பது பொய்., கேமராவால் ஆராய்வதே மெய்- டோக்கியோ ஒலிம்பிக்கில் Nikon கேமராக்களின் அதீத பங்கு!

#4

#4

இந்த போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா Victus உள்ளிட்ட சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போன்.

சூழ்நிலை சரியில்லை எதுக்கு வீண் அலைச்சல்- பான்கார்ட்டில் இதை ஆன்லைன் மூலமே செய்யலாமே!சூழ்நிலை சரியில்லை எதுக்கு வீண் அலைச்சல்- பான்கார்ட்டில் இதை ஆன்லைன் மூலமே செய்யலாமே!

#5

#5

புதிய போக்கோ எக்ஸ்3 ஜிடி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான அம்சங்கள் இவற்று அடகக்கம். குறிப்பாக இந்த சாதனத்தின் எடை 193 கிராம் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ATM கட்டணம்.. அளவை மீறினால் இந்த சேவைகளுக்கும் கட்டணம் உண்டு - RBI அறிவிப்பு..ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புதிய ATM கட்டணம்.. அளவை மீறினால் இந்த சேவைகளுக்கும் கட்டணம் உண்டு - RBI அறிவிப்பு..

டி சாதனத்தில் 8ஜிபி

போக்கோ எக்ஸ்3 ஜிடி சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதேபோல் போக்கோ எக்ஸ்3 ஜிடி சாதனத்தின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.22,800-ஆக உள்ளது. பின்பு கிளவுட் ஒயிட், ஸ்டார்கேஸ் பிளாக் மற்றும் Wave Blue நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Poco X3 GT Smartphone Launched: Here are the top 5 features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X