அவ்வளவு அவசரமா: அறிமுகத்துக்கு முன் விற்பனைக்கு வந்த போக்கோ எக்ஸ் 3 ஜிடி!

|

போக்கோ எக்ஸ் 3 ஜிடி சாதனம் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பாக விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

அவ்வளவு அவசரமா-அறிமுகத்துக்கு முன் விற்பனைக்கு வந்த போக்கோ எக்ஸ்3 ஜிடி

போக்கோ எக்ஸ் 3 ஜிடி ஸ்மார்ட்போன் ஜூலை 28 ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த போக்கோ தயாராகி வருவதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. சமீபத்தில் கசிந்த ரெண்டர்களிந் தகவலின்படி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி-ன் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக போக்கோ ஸ்மார்ட்போன் இருக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய தகவலின்படி போக்கோ எக்ஸ் 3 ஜிடி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக விற்பனைக்கு வந்தது.

போக்கோ எக்ஸ் 3 ஜிடி மீடியாடெக் டைமன்ஸிட்டி 1100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மேலும் ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 6.6 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன் காட்சியோடு வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 3 ஜிடி மூன்று கேமரா அமைப்போடு வருகிறது. இது 64 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் முன்புறத்தில் 16 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

போக்கோ எக்ஸ் 3 ஜிடி எதிர்பார்க்கப்படும் விலை குறித்து பார்க்கையில், இது ரூ.30,000 என்ற விலைப்பிரிவில் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த பிராண்ட் இந்திய சந்தைக்கு வருமா என்பது குறித்து நிறுவனம் தரப்பில் எந்தவொரு தகவலும் இல்லை. அதேபோல் இதே பிராண்ட் சமீபத்தில் எஃப் 3 ஜிடி என்ற ஸ்மார்ட்போனை ரூ.26,999 என்ற விலை பிரிவில் கொண்டு வந்தது.

இந்த பிராண்ட் தனது சொந்த பிராண்டின் கீழ் பல ரெட்மி தொலைபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சக்தி வாய்ந்த அம்சங்களோடு நியாயமான விலையில் வருகிறது. அதேபோல் போக்கோ எஃப் 3 ஜிடி 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 1200 சிப்செட் ஆகிய அம்சங்களோடு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Poco X3 GT Sale Started Before its Official Launch: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X