புதுசா போன் வாங்க போறீங்களா? அப்போ இன்னம் ஒரு 3 நாள் வெயிட் பண்ணுங்க! Poco X3 இருக்கு!

|

புதிதாக ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்களின் கவனத்திற்கு, குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த திறனுடன் கூடிய ஸ்மார்ட்போனை தான் அனைவரும் வாங்க நினைப்பீர்கள். உங்களுக்கான அற்புதமான சாய்ஸ் இன்னும் 3 நாட்களில் விற்பனைக்குக் களமிறங்கவுள்ளது. ஆகையால் கொஞ்சம் வெயிட் பண்ணி இந்த ஸ்மார்ட்போனை வாங்குங்கள்.

போக்கோ எக்ஸ் 3 விற்பனை

போக்கோ எக்ஸ் 3 விற்பனை

சியோமி ஸ்பின்-ஆஃப் போக்கோ இந்தியா நிறுவனம், போக்கோ எக்ஸ் 3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் கோபால்ட் ப்ளூ மற்றும் ஷடோவ் க்ரெய் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய Poco X3 ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 29ம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

டிஸ்பிளே மற்றும் சிப்செட்

டிஸ்பிளே மற்றும் சிப்செட்

Poco X3 ஸ்மார்ட்போன், 6.67' இன்ச் கொண்ட 1080 × 2400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 240 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி விகிதத்துடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது அட்ரினோ 618 ஜி.பீ.யுடன் ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Poco X3 ஸ்மார்ட்போனில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!SBI அதிரடி அறிவிப்பு: இனி பணம் எடுக்க ATM-ஐ மட்டும் பயன்படுத்த வேண்டாம்! ADWM கூட இருக்கே!

லிக்விட் கூல் டெக்னாலஜி

லிக்விட் கூல் டெக்னாலஜி

Poco X3 ஸ்மார்ட்போனில், லிக்விட் கூல் டெக்னாலஜி 1.0 பிளஸுடன் 70% பெரிய ஹீட் பைப்களுடன் வருகிறது, இது Poco X3 ஸ்மார்ட்போன் சாதனத்தை 6 டிகிரி வரையில் குளிர்விக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Poco X2 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் இதுவாகும். கடந்த மாதம் ஐரோப்பா சந்தையில் Poco X3 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.

Poco X3 ஸ்மார்ட்போன் கேமரா

Poco X3 ஸ்மார்ட்போன் கேமரா

Poco X3 ஸ்மார்ட்போன், குவாட்-கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 13 மெகாபிக்சல் கொண்ட 119 ° அல்ட்ரா-வைட் சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட டெப்த் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட 4cm மேக்ரோ சென்சார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால் அனுபவத்திற்காக 20 மெகாபிக்சல் கேமரா பஞ்ச் ஹோல் நாட்ச் கட்அவுட் டிசைனுடன் கொடுக்கப்பட்டுள்ளது.

உஷார்! ஆன்லைன் லோன் எடுத்த பெண்! மொபைலுக்கு வந்த அவரின் 'அந்த' புகைப்படம்!உஷார்! ஆன்லைன் லோன் எடுத்த பெண்! மொபைலுக்கு வந்த அவரின் 'அந்த' புகைப்படம்!

பேட்டரி மற்றும் சார்ஜிங்

பேட்டரி மற்றும் சார்ஜிங்

புதிய போக்கோ X3 ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு 10 இணக்கத்துடன் கூடிய MIUI 12.0.1 மூலம் இயங்குகிறது. இந்த சாதனம் 6000 mAh பேட்டரியுடன் கூடிய 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறை கைரேகை ஸ்கேனர் Poco X3 ஸ்மார்ட்போனில் சைடில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் IP53 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் சான்றிதழ் மதிப்பீட்டைக் பெற்றுள்ளது.

இணைப்பு அம்சம்

இணைப்பு அம்சம்

புதிய Poco X3 ஸ்மார்ட்போனின், இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஐஆர் பிளாஸ்டர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் வருகிறது. இந்தியாவில் போக்கோ எக்ஸ் 3 ஸ்மார்ட்போன், 5160mAh பேட்டரி சக்திக்கு பதிலாக 6000 எம்ஏஎச் பேட்டரி சக்தியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Poco X3 விலை

Poco X3 விலை

Poco X3 ஸ்மார்ட்போனின், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ .16,999 என்ற விலையும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ .18,499 என்ற விலையும், இதன் டாப் எண்டு வேரியண்ட் மாடலான 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் ரூ .19,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Poco X3 go on sale in the country via Flipkart starting September 29 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X