Home
Mobile

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை உயர்வு.!

ஜிஎஸ்டி உயர்வு காரணமாக போக்கோ எக்ஸ்2 உட்பட பல்வேறு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சியோமி, ஒப்போ, ரியல்மி உள்ளிட்ட பல்வேறு மொபைல்களின் விலைகள் அதகரித்துள்ளன.

ள COVID-19 நெருக்கடி காரணமாக

திருத்தப்பட்ட விலைகள் ஏற்கனவே பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளன, ஆனால் தற்போதுள்ள COVID-19 நெருக்கடி காரணமாக ஸ்மார்ட்போன்கள் வாங்குவதற்கு இப்போது கிடைக்கவில்லை.

விலை நிர்ணயம்

மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸமார்ட்போனின் முந்தைய விலை 15,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்வால் 16,999-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட மாடலின் முந்தைய விலை ரூ.16.999-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்வால் 17.999-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட மாடலின் முந்தைய விலை ரூ.19,999-ஆக இருந்தது, தற்சமயம் விலை உயர்வால் 20,999-என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப்பார்ப்போம்.

போக்கோ எக்ஸ்2 டிஸ்பிளே

போக்கோ எக்ஸ்2 டிஸ்பிளே

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் அளவிலான முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகதிம் அடிப்படையில் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பொறுத்தவரை இன்டெலிஜெண்ட் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட்" தொழில்நுட்பத்துடன் வருகிறது. எனவே துல்லியாமன காட்சிகளை வழங்கும், பின்பு ரெஃப்ரெஷ் ரேட்டை தானாகவே மாற்றியமைக்கும்.

அசத்தலான சிப்செட் வசதி

அசத்தலான சிப்செட் வசதி

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி எஸ்ஒசிசிப்செட் இடம்பெற்றுள்ளது, இதனுடன் அட்ரினோ 618ஜிபியு வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு இந்த சாதனத்தில் கிராபிக்ஸ் ரெண்டரிங்கை அதிகரிக்க இரண்டாம் தலைமுறை கேம் டர்போ மோட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது, இதனுடன் கஸ்டம் லிக்விட்கூல் தொழில்நுட்பமும் இடம்பெற்றுள்ளதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டள்ளது, பின்பு 20எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், VLOG மோட், 960fps ஸ்லோ-மோ வீடியோ ரெக்கார்டிங் மற்றும் பின்புற கேமரா அமைப்பிற்கான 4K வீடியோ பிடிப்பு போன்றவைகள் உள்ளன. மேலும் இந்த சாதனத்தின் செல்பீ கேமரா ஆனது, பனோரமா செல்பீ மோட், யுஐ பேஸ் டிஸ்டார்ஷன் கரெக்ஷன், யுஐ பியூடிப்பை, யுஐ போர்ட்ரெயிட் மோட் போன்ற அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

போக்கோ எக்ஸ் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 27வாட் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் வைஃபை, 4ஜி வோல்டிஇ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. குறிப்பாக 68நிமிடங்களில் இந்த சாதனத்தம் 100சதவிகிதம் சார்ஜை வழங்கும்.

Best Mobiles in India

English summary
Poco X2 price increased in India due to GST hike and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X