Home
Mobile

Poco X2 பிளாஷ் சேல்ஸ் விற்பனை இன்று துவங்குகிறது! மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த போன் இதுதான்!

போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. போக்கோ X2 ஸ்மார்ட்போன் வெற்றிகரமாக இரண்டு முறை தனது விற்பனையை நடத்தி முடித்துவிட்டு, இன்று தனது மூன்றாவது பிளாஷ் சேல்ஸ் விற்பனையை பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணிக்கு சில புதிய சலுகையுடன் மீண்டும் துவங்குகிறது.

குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்கள்

குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்கள்

போக்கோ X2 ஸ்மார்ட்போன் வெற்றிக்கு முக்கிய காரணமே, குறைந்த விலையில் அட்டகாசமான பல முக்கிய அம்சங்களை இந்த ஸ்மார்ட்போனில் வழங்கியது தான். குறிப்பாக டூயல் பன்ச் ஹோல் கேமரா, ஸ்னாப்டிராகன் 730G சிப்செட் மற்றும் மிரட்டலான குவாட் ரியர் கேமரா (நான்கு) பின்பக்க கேமராவுடன் களமிறக்கப்பட்டுள்ளது. இத்தனை அம்சத்துடன் வரும் இந்த போனின் விலையைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

போக்கோ X2 ஸ்மார்ட்போனின் மூன்று வேரியண்ட் விலை விபரம்

போக்கோ X2 ஸ்மார்ட்போனின் மூன்று வேரியண்ட் விலை விபரம்

போக்கோ X2 ஸ்மார்ட்போன் மூன்று விதமான வேரியண்ட் மாடல்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

  • இதன், 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மாடல் வெறும் ரூ.15,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
  • உங்கள் மாடலை தேர்வு செய்யுங்கள்

    உங்கள் மாடலை தேர்வு செய்யுங்கள்

    • 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் மாடல் ஸ்மார்ட்போன் ரூ.16,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.
    • 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலை ரூ.19,999 என்ற விலையில் கிடைக்கிறது.
    • ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனை சலுகைகள்

      ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனை சலுகைகள்

      ஃபிளாஷ் சேல்ஸ் விற்பனையின் போது நீங்கள் வாங்கும் போக்கோ X2 ஸ்மார்ட்போனுக்கு, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை EMI பரிவர்த்தனைகளுக்கும் செல்லுபடியாகும். வட்டி இல்லா தவணை திட்டத்திலும் போக்கோ X2 ஸ்மார்ட்போன் மாதத்திற்கு வெறும் ரூ.1,334 என்ற விலையிலிருந்து கிடைக்கிறது.

      போக்கோ X2 சிறப்பம்சங்கள்

      போக்கோ X2 சிறப்பம்சங்கள்

      • 120 ஹெர்ட்ஸ் ரெப்பிரேஷ் ரேட் கொண்ட 6.67' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
      • குவால்காம் ஸ்னாப்டிராகன் 730G ஆக்டா கோர் பிராசஸர்
      • லீகுய்ட் கூலிங் தொழில்நுட்பம்
      • ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய MIUI 11 ஸ்கின் இயங்குதளம்
      • 6ஜிபி / 64ஜிபி, 6ஜிபி / 128ஜிபி, 8ஜிபி / 256ஜிபி வேரியண்ட் மாடல்கள்
      • டூயல் பன்ச் ஹோல் டிசைன்
      • 20 மெகா பிக்சல் கொண்ட கேமராவுடன் கூடிய 2 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா
      • குவாட் கேமரா அமைப்பு

        • 64 மெகா பிக்சல் கொண்ட Sony IMX 686 கேமரா
        • 8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் கேமரா
        • 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ கேமரா
        • 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார் கேமரா
        • 27W பாஸ்ட் சார்ஜிங்
        • 4,500 எம்.ஏ.எச் பேட்டரி
        • முடிந்தவரை முந்திக்கொள்ளுங்கள்

          முடிந்தவரை முந்திக்கொள்ளுங்கள்

          மலிவான விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், இன்றைய போக்கோ X2 பிளாஷ் சேல்ஸ் விற்பனையைத் தவற விட வேண்டாம். பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி முதல் இந்த விற்பனை துவங்குகிறது. குறைவான யூனிட்களே பிளாஷ் சேல்ஸ் விற்பனையில் கிடைக்கும் என்பதால் முடிந்தவரை முந்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Poco X2 Flash Sale From 12pm Noon via Flipkart Check Price Specifications Offers and Features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X