Home
Mobile

புது போன் வாங்குறவங்க வெயிட் பண்ணுங்க.. Basic-ஐ தூக்கு, Pro Max-ஐ இறக்கு.. வரிசைக்கட்டும் புது POCO போன்கள்!

போக்கோ எப்8 ப்ரோ (Poco F8 Pro) மற்றும் போக்கோ எப்8 ப்ரோ அல்ட்ரா (Poco F8 Ultra) ஆகிய 2 மாடல்களும் எதிர்பார்த்ததை விட இரண்டு மாதங்களுக்கு முன்பே அறிமுகமாகி உள்ளன. அடுத்ததாக போக்கோ எம்8 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் பல சந்தைகளில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

இதற்கிடையில் ஷாவ்மீடைம் (XiaomiTime) வழியாக கிடைத்ள்ள ஒரு புதிய அறிக்கை, போக்கோ நிறுவனம் 2 முக்கிய மாடல்களை தவிர்க்க முடிவு செய்துள்ளதாக கூறுகிறது. கிடைக்கப்பெற்ற தகவலின்படி போக்கோ எக்ஸ்8 சீரீஸின் கீழ் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) அறிமுகமாகும். ஆனால் போக்கோ எக்ஸ்8 (Poco X8) அறிமுகம் செய்யப்படாது.

வெயிட் பண்ணுங்க.. வரிசைக்கட்டும் புது POCO போன்கள்!

எம்ஐ குறியீட்டை அடிப்படையாக கொண்ட இந்த அறிக்கை, பின்வரும் ஸ்மார்ட்போன்கள் போக்கோ மாடல்களாக மறுபெயரிடப்படும் என்று கூறுகிறது. போக்கோ எம்8 5ஜி (Poco M8 5G) - ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு

போக்கோ எம்8ப்ரோ 5ஜி (Poco M8 Pro 5G) - ரெட்மி நோட் 15 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 15 Pro+ 5G) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு ஆக வரும். போக்கோ எக்ஸ்8 ப்ரோ (Poco X8 Pro) - ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு பதிப்பு ஆக வரும்

போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) - ரெட்மி டர்போ 5 ப்ரோ மேக்ஸ் (Redmi Turbo 5 Pro Max) மாடலின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு பதிப்பு ஆக வரும். அதாவது மேலே உள்ள பட்டியலில் ஸ்டாண்டர்ட் போக்கோ எக்ஸ்8 மாடல் இல்லை. முதலில் இது ரெட்மி நோட் 15 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது; தற்போது இதன் அறிமுகம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? முன்னரே குறிப்பிட்டபடி போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகமாகும் ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் (மறுபெயரிடப்பட்ட) வெர்ஷன் ஆக இருக்கலாம்.

அதாவது ஒரே அம்சங்களுடன் வெவ்வேறு சந்தைகளில் இருவேறு பெயர்களின் கீழ் அறிமுகமாகும். ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது ஜனவரி 2026 தொடக்கத்திலோ சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் உலகளாவிய சந்தைகளில் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி டர்போ 5 / போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1.5K ரெசல்யூஷன் LTPS OLED டிஸ்பிளே, 100W சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh அல்லது 9,000mAh பேட்டரி, மெட்டல் மிடில் பிரேம் டிசைன் மற்றும் ஐபி98 / ஐபி69 ரேட்டிங் சேஸிஸ் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கலாம். விலை ரூ.50,000 க்குள் (ரூ.45,990) இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் அறிமுகமான போக்கோ எப்8 அல்ட்ரா, போக்கோ எப்8 ப்ரோவின் விலை விவரங்கள்: போக்கோ எப்8 அல்ட்ராவின் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.65,100 என்றும், அதே நேரத்தில் 16 ஜிபி + 512 ஜிபி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.71,300 என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அறிமுகம் விரைவில் நடக்கும்.

இதேபோல போக்கோ எப்8 ப்ரோவின் 12 ஜிபி + 256 ஜிபி மாடல் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.51,700 என்றும், அதே நேரத்தில் 12 ஜிபி + 512 ஜிபி வேரியண்டின் விலை தோராயமாக ரூ.56,100 என்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் இந்திய அறிமுகம் விரைவில் நடக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco to skip Poco X8 and launching Poco X8 Pro Max Soon Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X