நிறுத்த மாற்றான்யா.. 7000mAh பேட்டரி உடன் இன்னொரு புது POCO போன்.. 8GB ரேம், 50MP கேம், IP64 வேற! எந்த மாடல்?
போக்கோ (POCO) நிறுவனம் ஒரு முடிவோடு தான் இருக்கிறது போல.. 7000mAh பேட்டரி உடன் அதன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (POCO M7 Plus 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து.. ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் "பிக் பேட்டரி" ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டு இருந்த இந்தியர்களை தன்வசம் இழுத்துள்ளது/
இதற்கிடையில் போக்கோ நிறுவனம் இதோடு நிறுத்தப்போவதில்லை. 7000mAh பேட்டரி உடன் இன்னொரு ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்ய உள்ளது. அது போக்கோ எம்7 4ஜி (POCO M7 4G) ஸ்மார்ட்போன் ஆகும். இது போக்கோ எம்7 சீரிஸின் கீழ் வரம் 4வது மாடல் ஆக இருக்கும்.

ஏற்கனவே டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Dimensity 7025 Ultra) உடனான போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (Poco M7 Pro 5G) கடந்த டிசம்பர் 2024 இல் அறிமுகமானது; மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (Snapdragon 4 Gen 2 SoC) உடன் போக்கோ எம்7 5ஜி (Poco M7 5G) அறிமுகமானது
அதை தொடர்ந்து இப்போது போக்கோ நிறுவனம் அதன் போக்கோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்டை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே, தற்போதுள்ள எம்7 சீரீஸ் மாடல்களை போலல்லாமல், போக்கோ எம்6 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டியை மட்டுமே ஆதரிக்கும்; ஆக எல்லாவற்றை விடவும் குறைவான விலை நிர்ணயத்தை பெறும்.
போக்கோ எம்7 4ஜி ஸ்மார்ட்போனில் (ஜிஎஸ்எம்அரேனாவின் சமீபத்திய அறிக்கையின்படி) என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.9 இன்ச் எல்சிடி பேனல் (LCD Display)
- எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷன்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 850 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- ஸ்னாப்டிராகன் 685 சிப்செட்
- 6ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இடம்பெறும்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் -ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர் ஓஎஸ் 2
- 50 மெகாபிக்சல் ரியர் கேமரா
- 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- இரண்டும் 1080p வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும்
- 33W பாஸ்ட் சார்ஜிங்
- 7000mAh பேட்டரி
- ரீடெயில் பாக்ஸில்சார்ஜர் இடம்பெறாது
- ஐபி 64 ரேட்டிங்
- அளவீட்டில் 171.08 x 82.05 x 8.55 மிமீ
- எடையில் 224 கிராம்
புதிய போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.14,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
புதிய போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை விவரங்கள்: இது வருகிற ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் மதியம் 12 மணிக்கு அக்வா ப்ளூ, கார்பன் பிளாக் மற்றும் குரோம் சில்வர் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகைகளை பொறுத்தவரை HDFC, SBI அல்லது ICICI வங்கி அட்டைகளை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 உடனடி தள்ளுபடி அல்லது தகுதியான போன்களுக்கு கூடுதலாக ரூ.1,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








