பின்றானே இவன்.. 7900mAh பேட்டரி.. 4 OS அப்டேட்.. 45W சார்ஜிங்.. 12GB ரேம்.. LEATHER பேக் பேனல்.. எந்த மாடல்?
போகோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G) ஸ்மார்ட்போனின் டிசைன், கலர் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. இதுபோக ஓஎஸ் மற்றும் அப்கிரேட் விவரங்களையும் போகோ நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த போகோ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் பிளிப்கார்ட் தளத்தில் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன.
மெட்டாலிக் ஃபினிஷ் மிடில் ஃபிரேம் (Metalic Finish Middle Frame) டிசைனில் மூன்று கலர்களில் கிடைக்க இருக்கிறது. இதில் ப்ளூ (Blue), பிளாக் (Black) மற்றும் லெதர் கிரீன் (Leather Green) ஆகிய கலர்கள் இருக்கின்றன. குவாட் கர்வ்ட் பேக் டிசைன் (Quad Curved Back Design) கொண்டுள்ளது. லெதர் கிரீன் வேரியண்ட்டில் மட்டும் மிடில் ஃபிரேம் கோல்டன் ஷேடில் வருகிறது.

அதேபோல கோல்டன் கேமரா டெகோ (Golden Camera Deco) கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற கலர் வேரியண்ட்களில் அதே ஷேடில் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) டிஸ்பிளே புரொடெக்சனை கொடுத்து இருக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி மாடலுக்கு கிடைக்கிறது.
வெட் டச் டெக்னாலஜி 2.0 (Wet Touch Technology 2.0) கிடைக்கிறது. ஆகவே, டியூரபிலிட்டியில் பக்கா ஸ்மார்ட்போன் மாடலாக இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே, பேட்டரி, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் உறுதியாகிவிட்டன. ஆகவே, இந்த பீச்சர்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம். இறுதியில் பட்ஜெட் செக்மெண்ட்டை பார்க்கலாம்.
போகோ எம்8எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO M8x 5G Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) கொண்ட மாடலாக இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்கிரேட்கள் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்க இருக்கிறது.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 4என்எம் (Qualcomm Snapdragon 4 Gen 5 4nm) சிப்செட் கொடுக்கிறது. 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் & 6 ஜிபி விர்ச்சுவல்) கொண்ட மாடலாக போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. 3 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7900mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது.
இந்த பேட்டரிக்கு 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்க உள்ளது. 30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். 13 மணி நேரங்களுக்கு கேமிங் பேக்கப் கொடுக்கும். ஹீட் கன்ட்ரோல் கொடுக்க 12439 எம்எம்² அல்ட்ரா லார்ஜ் கிராபைட் ஷீட் உள்ளது. 1924 எம்எம்² காப்பர் ஃபாய்ல் லேயர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன.
போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.18,999 ஆக இருந்தது. ஆகவே, இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம். ஆரம்ப விலை வேரியண்ட் ரூ.15,000 பட்ஜெட்டிலும் கிடைக்க வாய்ப்புள்ளது. இது 6 ஜிபி ரேம் வேரியண்ட்டாக இருக்கும்.


Click it and Unblock the Notifications