Home
Mobile

வெச்சான் பாருங்க.. பட்ஜெட்ல 7900mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. 12GB ரேம்.. புது POCO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் புதிய மாடலாக வெளியாக இருக்கும் போகோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G) ஸ்மார்ட்போனின் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், கூலிங் சிஸ்டம் மற்றும் விர்ச்சுவல் ரேம் உள்ளிட்ட பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. டிசைனும் ஏற்கனவே உறுதியாகிவிட்டதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் போகோ தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, இந்த தளங்களில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு முக்கிய பீச்சர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் டிசைன், சிப்செட் விவரங்கள் ஏற்கனவே வெளியாகின.

வெச்சான் பாருங்க.. பட்ஜெட்ல 7900mAh பேட்டரி.. 44W சார்ஜிங்.. மாடல்?

இப்போது, பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கூலிங் சிஸ்டம் உறுதியாகி இருக்கிறது. இந்த பீச்சர்களை வைத்து பார்க்கும்போது, போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக வெளியாக வாய்ப்புள்ளது. பட்ஜெட்டை பொறுத்து வரவேற்பு இருக்கும். இருப்பினும், மிட்-ரேஞ்ச் மாடல்களை விட கம்மியான விலைக்கு எதிர்பார்க்கலாம்.

போகோ எம்8எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO M8x 5G Specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 (Qualcomm Snapdragon 4 Gen 5) சிப்செட் கொண்ட மாடலாக இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி வெளியாக இருக்கிறது. பில்ட்-இன் 4என்எம் ப்ராசஸர் வருகிறது. 650,000 மேல் அன்டுடு ஸ்கோர் கொண்டுள்ளது. இந்தியாவின் முதலாவது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் மாடலாகவும் இருக்கிறது.

இதை போகோ நிறுவனம் கிளைம் செய்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி விர்ச்சுவல் (Virtual RAM) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, 12 ஜிபிக்கான ரேம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். அதேபோல 6 ஜிபி ரேம் கிடைப்பதால், விலையும் பட்ஜெட் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கும். மெமரி குறித்த விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும், 128 ஜிபி பேசிக் வேரியண்ட் கிடைக்கலாம்.

மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக இருக்கும் என்று சொல்ல முக்கிய காரணமாக பேட்டரி சிஸ்டம் இருக்கிறது. இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 7900mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பேட்டரிக்கு 45W மட்டுமல்லாமல், 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது.

ஆகவே, கேமிங்கின் போது இயர்பட்கள் அல்லது ஹெட்போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஓடிடி பிரியர்களுக்கும் அதிக பேக்கப் மற்றும் செகண்டரி டிவைஸ் சார்ஜிங் செய்ய ஏதுவாக இருக்கும். கேமிங் மாடலாக இருப்பதற்கு மற்றொரு காரணமாக தெர்மல் மேனேஜ்மெண்ட் (Thermal Management) பக்காவாக இதில் பில்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

12439 எம்எம்² அல்ட்ரா லார்ஜ் கிராபைட் ஷீட் மற்றும் 1924 எம்எம்² காப்பர் ஃபாய்ல் லேயர் கிடைக்கிறது. ஆகவே, சார்ஜிங் மற்றும் ஹெவி யூசேஜின் போது ஹீட் கன்ட்ரோல் செய்யப்படும். டிசைனை பார்க்கையில் பிளாட் டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, கேமிங்கின் போது ஆப்ஷன்கள் ஹைட்டன் ஆகாது. டூயல் கேமரா சிஸ்டம் மற்றும் கோல்டன் கலர் கேமரா பம்ப் இருக்கிறது.

அதேபோல மிடில் ஃபிரேமும் கோல்டன் கலரில் மெட்டாலிக் ஃபினிஷிங் கொடுக்கிறது. ரியரில் வீகன் லெதர் பேனல் இருக்கிறது. கிரீன் கலரில் வெளியாக இருக்கிறது. இந்த விவரங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன. ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியாக இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்கள் உறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் அப்டேட் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
POCO M8x 5G With 7900mAh Battery 44W Fast Charging Ahead Of India Launch on August 21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X