Home
Mobile

வச்சி செஞ்சிட்டாப்ல.. ரூ.18,999 பட்ஜெட்ல 7900mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

வீகன் லெதர் பேனல் கொண்ட பாடியில் 7900mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 22.5W ரிவர்ஸ் சார்ஜிங், 120Hz டிஸ்பிளே, 50 எம்பி கேமரா போன்ற பீச்சர்களையும் பேக் செய்யும்படி போகோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. இந்த போகோ மாடலின் பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரூ.20,000 பட்ஜெட்டில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் கேமரா, பேட்டரி அல்லது டிசைனில் தனித்தனியே கவனம் செலுத்தும்படி ஏகப்பட்ட மாடல்கள் இருக்கின்றன. ஆனால், இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மூன்றிலும் கவனம் செலுத்தி இருக்கிறது. வீகன் லெதர் பேனல் டிசைனில் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ற பேட்டரியை கொடுத்து இருக்கிறது.

வச்சி செஞ்சிட்டாப்ல.. ரூ.18,999 பட்ஜெட்ல 7900mAh பேட்டரி.. எந்த மாடல்?

போகோ எம்8எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO M8x 5G Specifications): பெரிய 7900mAh பேட்டரியை இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி பேக் செய்துள்ளது. இதில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் பேக் செய்யப்பட்டு இருக்கிறது. டிரிபிள் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, பேட்டரி ஹீட்டை கன்ட்ரோல் செய்து கொள்ள முடியும்

சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi HyperOS) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஹைப்பர் ஐலேண்ட் (Hyper Island), கிராஸ்-டிவைஸ் கனெக்டிவிட்டி உள்ளிட்ட பீச்சர்களை கொடுக்கிறது. 4 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்களையும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களையும் இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

6.9 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மொத்தமாக டிஸ்பிளேவுக்கு, கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 5 4nm) சிப்செட் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆக இருக்கிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆக இருக்கிறது. இந்த விலையில் இருந்து ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஆகவே, ரூ.18,999 ஆரம்ப விலைக்கு இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் லெதர் கிரீன் (Leather Green) ஆகிய கலர்களில் இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப பீச்சர்கள் பேக் செய்யப்பட்டு இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
POCO M8x 5G With 4GB RAM Launched in India Sale From August 27 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X