Home
Mobile

வந்துட்டான்டா.. வந்துட்டான்.. ரூ.2,000 ஆஃபருடன் POCO M8x 5G சேல் பிச்சிக்குது.. 7900mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் 7900mAh பேட்டரியுடன் களமிறங்கிய போகோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G) ஸ்மார்ட்போனின் விற்பனையானது தள்ளுபடி போக தொடங்கிவிட்டது. பிரீமியம் லுக் கொடுக்கும்படி வீகன் லெதர் பேனல் கிடைப்பதால், நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. விலை, விற்பனை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.20,999ஆகவும். 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.22,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.2,000 அறிமுக சலுகை போக ரூ.18,999 ஆரம்ப விலைக்கு கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.20,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

வந்துட்டான்டா.. வந்துட்டான்.. ரூ.2,000 ஆஃபருடன் POCO M8x 5G சேல்!

தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு இந்த தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் லெதர் கிரீன் (Leather Green) ஆகிய கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் லெதர் கிரீன் வேரியண்ட்டில் மட்டுமே டூயல் டோன் கிடைக்கும். பீச்சர்கள் எப்படி?

போகோ எம்8எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO M8x 5G Specifications): ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 5 4nm) சிப்செட்டை இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மட்டுமல்லாமல், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கின்றன. ஹைப்பர் ஐலேண்ட் (Hyper Island) உள்ளிட்ட பிரத்யேக பீச்சர்களுடன் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொடுக்கப்பட்டு இருக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.9 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) டிஸ்பிளே கிடைக்கிறது.

இந்த எல்சிடி (LCD) டிஸ்பிளேவுக்கு 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சன் கொண்ட டிஸ்பிளேவாக இருப்பதால், குவாலிட்டியை எதிர்பார்க்கலாம். மேலும், டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கொடுக்க IP64 ரேட்டிங் கிடைக்கிறது.

இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 7900mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 22.5W ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமராவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஃபிளிக்கர் சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்ட மாடலாக இந்த போகோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைத்து இருக்கின்றன. 8.8 எம்எம் தடிமன் மற்றும் 232 கிராம் எடை உள்ளது.

Best Mobiles in India

English summary
POCO M8x 5G With 4GB RAM Available At Rs 2000 Discount on Flipkart Check Offer Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X