Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. 7900எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் சமீபத்தில் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி (POCO M8x 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போன் நாளை முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் மதியம் 12 மணி அளவில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த போனின் விலை, அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எம்8எக்ஸ் 5ஜி அம்சங்கள் (POCO M8x 5G Specifications): 6.9-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில்720 x 1600 பிக்சல்ஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் ( Corning Gorilla Glass 7i protection), 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் (240Hz Touch sampling rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

நாளை விற்பனைக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 5 4nm) சிப்செட் உடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.

50எம்பி ரியர் கேமரா உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போக்கோ போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) போன்ற பல சிறப்பான வசதிகள் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், குளோனாஸ்,யூஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.

7900எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதிகளும் உள்ளன. பிளாக் (Black), ப்ளூ (Blue) மற்றும் லெதர் கிரீன் (Leather Green) ஆகிய கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.

நாளை விற்பனைக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எம்8எக்ஸ் 5ஜி விலை
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.20,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8எக்ஸ் 5ஜி மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது.

இந்த புதிய போக்கோ போனுக்கு ஆரம்ப சலுகையாக ரூ.2000 கூப்பன் தள்ளுபடியும் கிடைக்கும். எனவே இந்த போக்கோ எம்8எக்ஸ் 5ஜிபோனை ரூ.18,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Best Mobiles in India

English summary
POCO M8x 5G will go on sale for first time tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X