நாளை களமிறங்கும் புதிய போக்கோ 5ஜி போன்.. 7900mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
இந்தியாவில் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி (Poco M8x 5G) நாளை மதியம் 12 மணி அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எம்8எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Poco M8x 5G Specifications): ஆன்லைனில் வெளியான தகவலின்படி, 6.9-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

தரமான ஸ்னாப்டிராகன் 4 ஜென் 5 சிப்செட் (Snapdragon 4 Gen 5 chipset) உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி ஆதரவுடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi HyperOS 3) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
குறிப்பாக சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி மாடல் அறிமுகமாகும். அதேபோல் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது.
போக்கோ எம்8எக்ஸ் 5ஜி மாடல் 50எம்பி டூயல் ரியர் கேமரா உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமரா உடன் இந்த புதிய போன் வெளியாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய போனில் உள்ளது.
7900எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) ஆதரவுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும். ஆகவே இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை தரும்.
அதுவும் ரூ.20,999-க்கு கீழ் போக்கோ எம்8எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications