சத்தமின்றி அறிமுகமானது புதிய Poco 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ எம்8எஸ் 5ஜி (Poco M8S 5G) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், 7000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எம்8எஸ் 5ஜி அம்சங்கள் (Poco M8S 5G Specifications): 6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த போக்கோ எம்8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 850 நிட்ஸ் பிரைட்னஸ், 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm) சிப்செட் உடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு(Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போக்கோ எம்8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் Hyper OS சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி ரியர் கேமரா உடன் போக்கோ எம்8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ரியர் கேமரா மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor)
வசதியுடன் இந்த போக்கோ எம்8எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
7000mAh பேட்டரி உடன் போக்கோ எம்8எஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ்-வயர் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ எம்8எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8எஸ் 5ஜி விலை $189 (இந்திய மதிப்பில் ரூ.17,600)-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை $219 (இந்திய மதிப்பில் ரூ.20,395)-ஆக உள்ளது. பிலிப்பைன்ஸில் இந்த போன் விற்பனைக்கு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








