உலகையே மிரள விட்ட Poco.. IP69K ரேட்டிங்.. 100W சார்ஜிங்.. புது 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் இன்று புதிய போக்கோ எம்8 ப்ரோ (Poco M8 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. 6500எம்ஏஎச் பேட்டரி, ஐபி69கே ரேட்டிங், ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது. இப்போது போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
போக்கோ எம்8 ப்ரோ அம்சங்கள் (Poco M8 Pro specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772×1280 பிக்சல்ஸ், 2560ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் ரேட், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 12-பிட் கலர் டெப்த், டால்பி விஷன், எச்டிஆர் 10 பிளஸ், கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு (Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உடன் போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் கேமரா (Light Fusion 800) + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில்
உள்ளன.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)l டால்பி அட்மாஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த புதிய போக்கோ போனில் உள்ளன.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
6500mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் போக்கோ எம்8 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 205 கிராம் ஆகும்.

தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அதாவது 2026 பிப்ரவரி இறுதியில் போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.
போக்கோ எம்8 ப்ரோ விலை
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8 ப்ரோ போனின் விலை USD 299 (இந்திய மதிப்பில் ரூ.26,900)
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8 ப்ரோ போனின் விலை USD 359 (இந்திய மதிப்பில் ரூ.32,300)


Click it and Unblock the Notifications








