Home
Mobile

பலே POCO.. நியூ இயருக்கு நியூ போன்.. 100W சார்ஜிங், 6500mAh பேட்டரி.. பக்கா பட்ஜெட்டில் புதிய 5ஜி போன்!

2026 ஆம் ஆண்டு தொடங்கிய வேகத்திலேயே புதிய ஸ்மார்ட்போகளை அறிமுகம் செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் போக்கோ (POCO) நிறுவனமும் சேர்ந்துள்ளது. போக்கோ நிறுவனம் வருகிற 2026 ஜனவரி 8 ஆம் தேதி அன்று 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

என்னென்ன மாடல்கள்? போக்கோ எம்8 சீரீஸின் கீழ் போக்கோ எம்8 5ஜி மற்றும் போக்கோ எம்8 ப்ரோ 5ஜி ஆகிய 2 ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 8 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்கிடையில் ஒரு ரஷ்ய சில்லறை விற்பனையாளர் (wildberries) வழியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் லீக் ஆகியுள்ளது.

பலே POCO.. நியூ இயருக்கு நியூ போன்.. 100W சார்ஜிங், 6500mAh பேட்டரி!

போக்கோ எம்8, போக்கோ எம்8 ப்ரோ லீக் ஆன விலை விவரங்கள்: 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் போக்கோ எம்8 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.30,500 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதே ஸ்மார்ட்போனின் 512ஜிபி ஆப்ஷன் ரூ.35,500 க்கு வரலாம்

மறுகையில் உள்ள போக்கோ எம்8 ப்ரோ (POCO M8 Pro) ஸ்மார்ட்போன் ஆனது அதிக "ப்ரைஸ் டேக்" உடன் வருகிறது. 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.41,300 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இந்த விலைகள் மாறுபட்ட சர்வதேச வரிகளை கணக்கிடவில்லை; ஆக பிற சந்தைகளில் விலைகள் வேறுபடலாம்.

போக்கோ எம்8 (Poco M8) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? லீக் ஆன லிஸ்டிங்கின் படி, போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Snapdragon 6 Gen 3) கொண்டு இயங்கும். இது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15) அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 2 (HyperOS 2) கொண்டு இயக்கப்படலாம்

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் கர்வ்டு AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கேமரா செட்டப்பில் 50MP ப்ரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் இருக்கலாம். முன்பக்கத்தில் 20MP செல்பீ கேமரா இடம்பெறலாம். கடைசியாக இது 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,520mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்

போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இந்த போக்கோ எம்8 ப்ரோ மாடல் ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான சற்றே பெரிய 6.83 இன்ச் குவாட் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.

மேலும் இந்த டிஸ்பிளே கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 மூலம் பாதுகாக்கப்படலாம் இதுவும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர் ஓஎஸ் 2 கொண்டு இயக்கப்படலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) உடன் இயக்கப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை இது 8MP அல்ட்ரா-வைட் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 50MP ப்ரைமரி கேமராவை கொண்டிருக்கலாம். முன்பக்கத்தில் 32MP செல்பீ கேமரா இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட ஒரு பெரிய 6,500mAh பேட்டரி உடன் வரலாம்.

போக்கோ நிறுவனம் ந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையுமே டீஸ் செய்ய தொடங்கி உள்ளது, முன்னரே குறிப்பிட்டபடி இது வருகிற ஜனவரி 8 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். அந்நேரத்தில் பிராந்திய விலை நிர்ணயம் மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் உறுதிப்படுத்தப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M8 Pro and Poco M8 Price Major Specifications Leaked Ahead India Launch on January 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X