Home
Mobile

போட்டான் பாரு POCO.. ரூ.2,000 ஆஃபருடன் வந்த 8000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக வெளியாகிய போகோ எம்8 பவர் 5ஜி (POCO M8 Power 5G) ஸ்மார்ட்போனின் விற்பனை தள்ளுபடி போக தொடங்கி இருக்கிறது. 8000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 45W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 4என்எம் சிப்செட் கொண்ட இந்த போகோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.24,999 ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ. 27,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.22,999 விலைக்கு இந்த போகோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

போட்டான் பாரு POCO.. ரூ.2,000 ஆஃபருடன் வந்த 8000mAh பேட்டரி போன்!

போகோ எம்8 பவர் 5ஜி அம்சங்கள் (POCO M8 Power 5G Specifications): அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 4 Gen 4 4nm) சிப்செட்டை இந்த போகோ எம்8 பவர் 5ஜி கொடுக்கப்பட்டு உள்ளது. 6.99 இன்ச் (2396 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.

ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) புரொடெக்சனுடன் இந்த டிஸ்பிளே கிடைக்கிறது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு சியோமி ஹைப்பர் ஓஎஸ் 3 (Xiaomi Hyper OS 3) கொண்ட மாடலாக போகோ எம்8 பவர் 5ஜி கிடைக்க இருக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8000mAh பேட்டரி கிடைக்கிறது. 22.5W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது. 8.45 எம்எம் தடிமன் கொடுக்கப்பட்டு உள்ளது. 225 கிராம் எடை கொண்டுள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 1080p வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொண்ட மாடலாக இந்த போகோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர்கள் (Bottom-ported Speaker) கிடைக்கிறது.

5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்இடி (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) கிடைக்கிறது. 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

Best Mobiles in India

English summary
POCO M8 Power 5G With 6GB RAM Available Under Rs 23000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X