Home
Mobile

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2026 (Flipkart Big Billion Days Sale 2026) எனும் சிறப்பு விற்பனை தற்போது நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. அதேபோல் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ 5ஜி போன் ஒன்று இந்த சிறப்பு விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 58 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.22,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2500 தள்ளுபடியும் உள்ளது. ஆகுவே இந்த போனை ரூ.20,499 விலையில் வாங்கிவிட முடியும்.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எம்8 பவர் 5ஜி அம்சங்கள் (Poco M8 Power 5G specifications): 6.99-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது : போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன். இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் (Snapdragon 4 Gen 4 chipset) உடன் போக்கோ எம்8 பவர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த போனில் அட்ரினோ 613 ஜிபியு(Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

அதேபோல் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி ரியர் கேமரா உடன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

அதுவும் 8000எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஆளுக்கு 1 ஆர்டர் கன்ஃபார்ம்.. ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்?

இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor) இந்த புதிய போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் உள்ளது.

மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.1, வைஃபை 6 802.11 ஏசி, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ்இ யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. இந்த போனின் எடை 225 கிராம் ஆகும். பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும்.

Best Mobiles in India

English summary
Poco M8 Power 5G With 4GB RAM Available At Rs 20499 in Flipkart Big Billion Days Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X