Home
Mobile

நாளை விற்பனைக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. 8000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்? என்ன விலை?

சமீபத்தில் போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த புதிய போக்கோ 5ஜி போன் நாளை (ஆகஸ்ட் 7) பிளிப்கார்ட் தளத்தில் முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக நாளை மதியம் 12 மணி அளவில் இந்த போக்கோ போனை வாங்க முடியும். இப்போது போக்கோ எம்8 பவர் 5ஜி போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எம்8 பவர் 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8 பவர் 5ஜி மாடலின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8 பவர் 5ஜி மாடலின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.

நாளை விற்பனைக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

இந்த போனுக்கு அறிமுக சலுகையாக ரூ.3000 வரை (ரூ.1000 கூப்பன் சலுகை + ரூ.2000 வங்கி சலுகை) தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரூ.21,999 விலையில் இந்த புதிய போக்கோ போனை வாங்க முடியும்.

போக்கோ எம்8 பவர் 5ஜி அம்சங்கள் (Poco M8 Power 5G specifications): 6.99-இன்ச் ஃபுல் எச்டி AMOLED டிஸ்பிளே உடன் போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 சிப்செட் (Snapdragon 4 Gen 4 chipset) உடன் போக்கோ எம்8 பவர் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் இந்த போனில் அட்ரினோ 613 ஜிபியு(Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

அதேபோல் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

குறிப்பாக 8ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மாார்ட்போனில் இருக்கும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதுவும் 50எம்பி ரியர் கேமரா உடன் போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும என்றே 8எம்பி கேமரவும் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

8000எம்ஏஎச் பேட்டரி உடன் போக்கோ எம்8 பவர் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 3 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. இதுதவிர ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் வசதியும் உள்ளது.

நாளை விற்பனைக்கு வரும் புதிய போக்கோ 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) இந்த புதிய போனில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவும் உள்ளது.

பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இந்த புதிய போனை வாங்க முடியும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.1, வைஃபை 6 802.11 ஏசி, குளோனாஸ் (GLONASS), ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 225 கிராம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Poco M8 Power 5G phone will go on sale for first time tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X