போட்டான் பாரு POCO.. பக்கா பட்ஜெட்டில் 6500mAh பேட்டரி, 100W சார்ஜிங். 50MP கேமரா, OLED டிஸ்பிளே!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனத்தின் சப்-பிராண்ட் ஆன போக்கோ (POCO), அதன் மிகவும் பிரபலமான எம்-சீரீஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை உலக சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. என்ன மாடல்கள்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? என்ன விலைக்கு வரலாம்?
போக்கோ நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போன்கள் - போக்கோ எம்8 சீரீஸ் (POCO M8 Series) மாடல்களாக இருக்கலாம். இந்த சீரிஸின் கீழ் போக்கோ எம்8 (POCO M8) மற்றும் போக்கோ எம்8 ப்ரோ (POCO M8 Pro) என்கிற 2 மாடல்கள் இருக்கலாம்.

எப்போது அறிமுகமாகும்? முன்னதாக இந்த சீரிஸின் கீழ் 2 மாடல்களும் ஒன்றாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு புதிய லீக் ஆனது போக்கோ எம்8 மற்றும் போக்கோ எம்8 ப்ரோ ஆகிய இரண்டும் ஒன்றாக வராமல் போகலாம் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. கூடவே இவ்விரு ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்களையும் பகிர்ந்துள்ளது.
டிப்ஸ்டர் யோகேஷ் பிராரிடமிருந்து கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின்படி போக்கோ எம்8 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் நடுப்பகுதியில், அதாவது ஜனவரி 2026 இல் இந்திய சந்தையில் அறிமுகமாகும். பின்னர் போக்கோ எம்8 ப்ரோ மாடல் ஆனது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் நடுப்பகுதியில் - அதாவது பிப்ரவரியில் வெளியிடப்படலாம்.
போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? குறிப்பிட்ட டிப்ஸ்டர் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் முக்கிய விவரங்களையும் வெளியிட்டு உள்ளார். அதன்படி போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான சற்றே "உயரமான" 6.88-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் 50 எம்பி + 8 எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பையும், முன்பக்கத்தில் 32எம்பி செல்பீ கேமராவையும் கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 உடன் வரலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 6,500mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.
போக்கோ எம்8 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது FHD+ ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் OLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். பேக் பேனலில் 50 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் முன்பக்கத்தில் 20 எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். இது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப் உடன் வரலாம் மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,520mAh பேட்டரியை பேக் செய்யலாம்.
என்ன விலைக்கு வரலாம்? போக்கோ எம்8 சீரீஸின் ப்ரோ மாடல் ஆன போக்கோ எம்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15,000 - ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் (ரூ.17,990) அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள வெண்ணிலா வேரியண்ட் ஆன போக்கோ எம்8 ஆனது ரூ.10,000 - ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் (ரூ.14,990) அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9000mAh பேட்டரி கொண்ட போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போனும் ரெடி ஆகிறது: போக்கோ எக்ஸ்8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் அறிமுகமாகும் ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் (மறுபெயரிடப்பட்ட) வெர்ஷன் ஆக இருக்கலாம் என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதாவது ஒரே அம்சங்களுடன் வெவ்வேறு சந்தைகளில் இருவேறு பெயர்களின் கீழ் அறிமுகமாகும்.
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது ஜனவரி 2026 தொடக்கத்திலோ சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் உலகளாவிய சந்தைகளில் மறுபெயரிடப்பட்ட பதிப்பாக - போக்கோ எக்ஸ்8 ப்ரோவாக அறிமுகம் செய்யப்படலாம்
ரெட்மி டர்போ 5 / போக்கோ எக்ஸ்8 ப்ரோ - என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.5K ரெசல்யூஷன் LTPS OLED டிஸ்பிளே
- 100W சார்ஜிங் ஆதரவுடன் 8,000mAh அல்லது 9,000mAh பேட்டரி
- மெட்டல் மிடில் பிரேம் டிசைன்
- ஐபி98 / ஐபி69 ரேட்டிங் சேஸிஸ்
- விலை ரூ.50,000 க்குள் (ரூ.45,990) இருக்கலாம்


Click it and Unblock the Notifications








