Home
Mobile

யாரு விடுவா சொல்லுங்க.. 50எம்பி கேமரா.. IP66 ரேட்டிங்.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ எம்8 5ஜி (Poco M8 5G) ஸ்மார்ட்போன் ஆனது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. அதுவும் ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, ஐபி66 ரேட்டிங், ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 18 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை ரூ.16,999 விலையில் வாங்கிவிட முடியும்.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

போக்கோ எம்8 5ஜி அம்சங்கள் (Poco M8 5G Specifications): 6.77-இன்ச் 3டி கர்வ்டு டிஸ்பிளே வசதியுடன் இந்த போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2392 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 387 ஜபிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரெட், 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட், 68.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குவால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த புதிய போனில் உள்ளது.

50 மெகாபிக்சல்ப்ரைமரி ஷூட்டர் + 2 மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 400 சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆதவும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக 4K ரெசல்யூஷன் வீடியோ ரெக்கார்டு ஆதரவு வழங்குகிறது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 + IP66 ரேட்டிங்ஸ் பெற்றுள்ளது போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த போக்கோ மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவும் இந்த சாதனத்தில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இதில் உள்ளது.

இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

யாரு விடுவா சொல்லுங்க.. ஆஃபரில் POCO 5ஜி போன்.. எந்த மாடல்?

MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் பெற்றுள்ளது போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன். 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் எடை 211 கிராம் ஆகும்.

5520mAh பேட்டரி வசதியுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M8 5G with 6GB RAM available at 18 percent discount on Flipkart: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X