கனவுல கிடைக்காத டிஸ்கவுண்ட்.. 5520mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய ஸ்மார்ட்போன் மார்கெட்டில் கர்வ்ட் அமோலெட் (Curved AMOLED) டிஸ்பிளே மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இதில் பக்கா கேமரா சிஸ்டம் கொண்ட மாடலாகவும் இருக்கும் போகோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.
இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 23 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு ரூ.19,999 விலைக்கு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.18,999 விலைக்கு இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

போகோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): கர்வ்ட் டிசைன் மற்றும் 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது.
மேலும், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி பேக் செய்யப்பட்டு உள்ளது. வெட் டச் டெக்னாலஜி 2.0 (Wet Touch Technology 2.0) கிடைக்கிறது. ஆகவே, IP65 ரேட்டிங் + IP66 ரேட்டிங்குடன் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance) கிடைக்கிறது. மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி (Military Grade Durability) உள்ளது.
ஆகவே, MIL-STD-810H சர்டிபிகேஷன் கிடைக்கிறது. ஆக்டா கோர் 4என்எம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core 4nm Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட்டுடன் பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட மாடலாக இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் இருக்கிறது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.
சியோமி ஹைப்பர் ஓஎஸ் 2 (Xiaomi Hyper OS 2) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மட்டுமே கொடுக்கப்பட்டாலும், 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களை பெற்று கொள்ளலாம். 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்கிரேட்களும் கிடைக்கின்றன. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) உள்ளது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5520mAh பேட்டரியை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இதில் ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) சப்போர்ட் கிடைக்கிறது. 7.35 எம்எம் தடிமன் மற்றும் 211 கிராம் எடை கொடுத்துள்ளது. லைட் ப்யூஷன் 400 (Light Fusion 400) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டு உள்ளது.
4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. மேலும், செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 20 எம்பி செல்பீ ஷூட்டரை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
5ஜி, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ஜிபிஎஸ் (GPS) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. கார்பன் பிளாக் (Carbon Black), ப்ரோஸ்ட் சில்வர் (Frost Silver) மற்றும் கிளாசியல் ப்ளூ (Glacial Blue) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications