Home
Mobile

POCO போட்ட போடு.. 3டி AMOLED டிஸ்பிளே.. 5520mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. 50MP கேமரா.. எந்த மாடல்?

போகோ நிறுவனத்தின் அல்ட்ரா ஸ்லிம் மாடலான போகோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி உறுதியாகி உள்ளது. 7.35 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடி மற்றும் 178 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை மற்றும் பீச்சர்கள் குறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் 3டி கர்வ்ட் டிஸ்பிளே மற்றும் ஸ்லிம் பாடி கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதை பட்ஜெட் விலையில் கொடுக்க போகோ எம்8 5ஜி ரெடியாகிவிட்டது. வருகிற ஜனவரி 8 ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

POCO போட்ட போடு.. 3டி டிஸ்பிளே.. 5520mAh பேட்டரி.. 45W சார்ஜிங்!

டிசைன் மற்றும் கலருடன் பிளிப்கார்ட் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது. மேலும், 7.35 எம்எம் தடிமன் மற்றும் 178 கிராம் எடை கொண்ட மாடலாக இது இருப்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. பிளாக் கலரில் 3டி கர்வ்ட் டிசைனில் பார்க்க முடிகிறது. மேலும், 50 எம்பி கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்க இருக்கிறது.

இந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் விவரங்கள் மட்டுமே உறுதியாகி இருக்கின்றன. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துள்ளது. இந்த பீச்சர்களை பார்க்கையில், இது மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு கிடைக்க இருப்பது தெரிகிறது. அதேபோல பர்ஃபாமென்ஸ் பட்டையை கிளப்ப இருக்கிறது. இந்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போகோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Snapdragon 6 Gen 3) சிப்செட்டை இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது.
6.77 இன்ச் ( 2392 x 1080 பிக்சல்கள்) 3டி கர்வ்ட் அமோலெட் (3D Curved AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்க உள்ளது. 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5520mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) கிடைக்க உள்ளது. IP68 ரேட்டிங் கொண்டுள்ளது.

முன்னதாக வெளியான போகோ எம்7 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் ஸ்னாடிராகன் 4 ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 4nm) சிப்செட் உள்ளது. அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) மற்றும் சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கிடைத்துள்ளது. 6.88 இன்ச் (1600 x 720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே உள்ளது.

எச்டிபிளஸ் ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5160mAh பேட்டரி உள்ளது. IP52 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.10,999ஆக இருக்கிறது. ஆகவே, போகோ எம்8 5ஜி மாடலை ரூ.16,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M8 5G With 50MP Camera To Launch in India on January 8 Flipkart Sale Confirmed
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X