ஆரம்பமே ஆஃபர்.. நாளை விற்பனைக்கு வருகிறது புது POCO 5ஜி போன்.. எந்த மாடல்? என்ன விலை?
போக்கோ நிறுவனம் கடந்த வாரம் போக்கோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த புதிய போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது நாளை முதல் முறையாக பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக நாளை மதியம் 12 மணிக்கு இந்த போனின் விற்பனை தொடங்கும்.
போக்கோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G specifications): 6.77-இன்ச் 3டி கர்வ்டு டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதன் டிஸ்பிளேவில் 2392×1080 பிக்சல்ஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 3200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 387 ஜபிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரெட், 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட், 68.7 பில்லியன் கலர்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குவால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa-Core Qualcomm Snapdragon 6 Gen 3) சிப்செட் உடன் இந்த போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த போனில் உள்ளது.
8ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதவுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
IP65 + IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் MIL-STD-810H இராணுவ தர சான்றிதழ் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன்.
போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50 மெகாபிக்சல்ப்ரைமரி ஷூட்டர் + 2 மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 400 சென்சார் ஆகிய கேமராக்கள் உள்ளன. குறிப்பாக இந்த ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரவும் இதில் உள்ளது.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த போக்கோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன.

5520mAh பேட்டரி வசதியுடன் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி, 4ஜி VoLTE, ப்ளூடூத் 5.1, வைஃபை 5, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனின் எடை 178 கிராம் ஆகும்.
போக்கோ எம்8 5ஜி விலை
6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.18,999-ஆக உள்ளது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.19,999-ஆக உள்ளது. அதேபோல் இந்த போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.21,999-ஆக உள்ளது. ஆனால் முதல் 12 மணி நேரத்திற்குள் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,999 என்கிற அறிமுக விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








