Home
Mobile

2026-ம் ஆண்டின் முதல் Poco போன்.. நாளை வருகிறது.. 50எம்பி கேமரா.. IP66 ரேட்டிங்.. எந்த மாடல்?

2026-ம் ஆண்டில் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். அதாவது நாளை (ஜனவரி 8) இந்தியாவில் போக்கோ எம்8 5ஜி(POCO M8 5G)ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ. அதுவும் நாளை மதியம் 12 மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் இந்த போன் அறிமுகமாகும்.

குறிப்பாக இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும். இந்நிலையில் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

2026-ம் ஆண்டின் முதல் Poco போன்.. நாளை வருகிறது.. எந்த மாடல்?

போக்கோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): 6.77-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே உடன் இந்த புதிய போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3200 நிட்ஸ் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 எஸ்ஒசி (Snapdragon 6 Gen 3 SoC) சிப்செட் உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் இந்த புதிய போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 (android 15) இயங்குதள வசதியுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக ஸ்டைலான வடிவமைப்புடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

5520mAh பேட்டரி உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் , 18W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளன.

50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

2026-ம் ஆண்டின் முதல் Poco போன்.. நாளை வருகிறது.. எந்த மாடல்?

IP66 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது. டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் இந்த போனில உள்ளன.

கார்பன் பிளாக், கிளேசியல் ப்ளூ மற்றும் ஃப்ரோஸ்ட் சில்வர் நிறங்களில் இந்த போனை வாங்கலாம். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் ரூ.20,000 பட்ஜெட்டில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M8 5G will be launched in India tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X