மார்க்கெட்டை கலக்க வரும் புது POCO 5ஜி போன்.. IP65 ரேட்டிங்.. 5520mAh பேட்டரி.. எந்த மாடல்?
போக்கோ (POCO) நிறுவனம் அடுத்து போக்கோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது இந்த போனின் டீசர் வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
போக்கோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த புதிய போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் இந்த புதிய போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.
சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 எஸ்ஒசி (Snapdragon 6 Gen 3 SoC) சிப்செட் உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.
ஆண்ட்ராய்டு 16 (android 16) இயங்குதள வசதியுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக ஸ்டைலான வடிவமைப்புடன் இந்த புதிய போக்கோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
5520mAh பேட்டரி உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

50எம்பி டூயல் ரியர் கேமராக்கள் உடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செயயப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) வசதியுடன் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த போனில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








