Home
Mobile

POCO பொங்கல்.. புத்தம் புது 5G போன் மீது ரூ.6000 டிஸ்கவுண்ட்.. ஜனவரி 13 முதல் விற்பனை!

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகமான ரியல்மி 16 5ஜி சீரிஸ் மற்றும் ரெட்மி நோட் 15 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக போக்கோ (POCO) நிறுவனம் இன்று (2026 ஜனவரி 8 ஆம் தேதி) இந்தியாவில் அதன் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது

அது போக்கோ எம்8 5ஜி (Poco M8 5G) ஸ்மார்ட்போனாகும். இது மொத்தம் 3 கலர் ஆப்ஷன்களில், 3டி கர்வ்டு கிளாஸ் டிஸ்பிளே, குவால்காமின் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 6 சீரீஸ் சிப்செட், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 + IP66 ரேட்டிங் ஆகிய முக்கிய அம்சங்களுடன் அறிமுக செய்யப்பட்டுள்ளது.

புது POCO 5G போன் மீது ரூ.6000 டிஸ்கவுண்ட்.. ஜனவரி 13 முதல் விற்பனை!

இந்தியாவில் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஆப்ஷன் ரூ.22,999 க்கும், ஹை-எண்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இருப்பினும், முதல் 12 மணி நேரத்திற்குள் போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.15,999 என்கிற அறிமுக விலையில் வாங்கலாம். அதாவது நேரடியாக ரூ.6000 தள்ளுபடி விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 13 ஆம் தேதி அன்று பிளிப்கார்ட் வழியாக, கார்பன் பிளாக், கிளாசியல் ப்ளூ மற்றும் ஃப்ரோஸ்ட் சில்வர் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரும்.

போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 2.0
- டூயல் சிம்
- நான்கு வருட ஓஎஸ் அப்டேட்
- 6 வருட செக்யூரிட்டி அப்டேட்
- 6.77-இன்ச் (1080 x 2392 பிக்சல்ஸ்) 3டி கர்வ்டு டிஸ்பிளே

- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 3200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 387 [பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரெட்
- 100 சதவீதம் DCI-P3 கலர் கேமட்
- 68.7 பில்லியன் கலர்ஸ்

- வெட் டச் 2.0 (Wet Touch 2.0) ஆதரவுடன் வருகிறது, இது பயனர்கள் ஈரமான விரல்களால் கூட ஸ்மார்ட்போனை இயக்க அனுமதிக்கிறது.
- குவால்காமின் 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட்
- அட்ரெனோ ஜிபியு

- 8ஜிபி வரை LPDDR4x ரேம்
- 256ஜிபி வரை UFS 2.2 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP65 + IP66 ரேட்டிங்ஸ்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50-மெகாபிக்சல்ப்ரைமரி ஷூட்டர், 2-மெகாபிக்சல் லைட் ஃப்யூஷன் 400 சென்சார்

- 20-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 4K ரெசல்யூஷன் வீடியோ ரெக்கார்டு ஆதரவு
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 5520mAh பேட்டரி
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 18W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
- 5ஜி, 4ஜி LTE, ப்ளூடூத் 5.1, வைஃபை 5
- இஎஸ்பி டைப்-சி போர்ட்
- அளவீட்டில் 164x75.42x7.35 மிமீ
- எடையில் சுமார் 178 கிராம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M8 5G Launched in India Rs 6000 Discount on First Sale Starts January 13
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X