POCO போட்டான் பாரு.. 4 வருட OS அப்டேட்.. 3டி டிஸ்பிளே.. 5520mAh பேட்டரி.. 45W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள போகோ எம்8 5ஜி (POCO M8 5G) ஸ்மார்ட்போனின் ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட் பாலிசி உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 7.35 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி உறுதியானது. இப்போது, 4 வருட ஓஎஸ் அப்டேட் உறுதியாகி இருப்பதால், போகோ பிரியர்கள் வெயிட்டிங் செய்ய தொடங்கி விட்டனர். இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
வருகிற ஜனவரி 8 ஆம் தேதி இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. இந்த தேதி உறுதியாகும் முன்பே 7.35 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் மாடலாக அறிமுகம் செய்யப்பட இருப்பதை போகோ நிறுவனம் தெரிவித்து இருந்தது. பிறகு டிஸ்பிளே, கேமரா, சிப்செட் போன்ற பீச்சர்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. இப்போது, ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி பாலிசி வந்துள்ளது.

4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் கிடைக்க உள்ளன. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்கள் (Security Patch Updates) கிடைக்க உள்ளன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) கொண்டுள்ளது. ஸ்லிம் மற்றும் லைட் மாடலாக மட்டுமல்லாமல், நீண்ட வருடங்களுக்கு ஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்களை கொடுக்க உள்ளது.
போகோ எம்8 5ஜி அம்சங்கள் (POCO M8 5G Specifications): தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Octa Core Snapdragon 6 Gen 3) சிப்செட்டை இந்த போகோ போன் கொடுக்கிறது. 6.77 இன்ச் (2392 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது. 3டி கர்வ்ட் அமோலெட் டிசைனில் வெட் டச் 2.0 (Wet Touch 2.0) கொடுத்துள்ளது.
ஆகவே, IP66 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைத்துள்ளது. மேலும், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் (Reverse Charging) கிடைக்கிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுடன் 5520mAh பேட்டரி கிடைக்க உள்ளது. ஸ்லிம் மற்றும் லைட் மாடலாக இருக்கிறது.
ஏனென்றால், 7.35 எம்எம் தடிமனுடன் அல்ட்ரா ஸ்லிம் பாடி மட்டுமல்லாமல், மொத்தமாகவே 178 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. லைட் பாடி மற்றும் 3டி கர்வ்ட் டிஸ்பிளே கிடைப்பதால், எம்ஐஎல்-எஸ்டிடி-810 (MIL-STD-810) சர்டிபிகேஷனை கொடுக்கும் மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி கிடைத்துள்ளது. ஆகவே, 1.7 மீட்டர் உயரத்தில் இருந்து டிராப் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது.
இந்த பீச்சர்களுடன் டூயல் டோன் கலர்களில் வெளியாக உள்ளது. மேலும், இன் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) கனெக்டிவிட்டிகளை எதிர்பார்க்கலாம். ஜனவரி 8 ஆம் தேதி இந்திய மார்கெட்டில் வெளியாக உள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. 8 ஜிபி ரேம் + 8 ஜிபி விர்ச்சுவல் (Virtual RAM) கிடைக்க உள்ளது. மேலும், 128 ஜிபி மெமரி மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்களை எதிர்பார்க்கலாம். இந்த போகோ எம்8 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.20,000 பட்ஜெட்டுக்குள் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








