Home
Mobile

செம ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

போக்கோ நிறுவனம் இந்தியாவில் தரமான ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் போக்கோ நிறுவனத்தின் 5ஜி போன் ஒன்று தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.700 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

செம ஆஃபரில் போக்கோ 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

போக்கோ எம்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO M7 Pro 5G Specifications): போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போன் 5110mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வெளிவந்துள்ளது. மேலும் டஸ்ட் (Lunar Dust), லாவண்டர் ப்ரோஸ்ட் (Lavender Frost) மற்றும் ஆலிவ் ட்விலைட் (Olive Twilight) நிறங்களில் இந்த போன் வாங்க கிடைக்கிறது.

ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த போன். எனவே கேமிங் பயனர்கள் இந்த போக்கோ போனை நம்பி வாங்கலாம். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டு வெளிவந்துள்ளது இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி மாடல். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

ஆக்டோ கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் உடன் இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.

குறிப்பாக 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டுள்ளது இந்த போக்கோ போன். மேலும் இந்த டிஸ்பிளவில் 1080 × 2400 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி, கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் உள்ளிட்ட பல்வேறு டிஸ்பிளே அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 50 எம்பி மெயின் கேமரா (Sony LYT 600) + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கொண்டுள்ளது இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

தனித்துவமான டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் (Hi Res) போன்ற ஆடியோ அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M7 Pro 5G with 6GB RAM is available at 26 percent discount on Flipkart: Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X