Home
Mobile

புரட்டிப் போட்ட போக்கோ.. வெறும் ரூ.13999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 5110mAh பேட்டரி.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த போக்கோ கஸ்டமர்களும் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் குவியும்படியான பட்ஜெட்டில் சோனி சென்சார் கேமரா, அமோலெட் டிஸ்பிளே, 5110mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம், IP64 ரெசிஸ்டன்ட், டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹைப்பர் ஓஎஸ் போன்ற மிரட்டலான பீச்சர்களுடன் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனில் பேக் செய்யப்பட்டுள்ள முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

போக்கோ எம்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO M7 Pro 5G Specifications): இந்த போக்கோவில் 6.67 இன்ச் (1080 × 2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 2160Hz டிம்மிங் ஃபிரிகொன்சி இருக்கிறது.

புரட்டிப் போட்ட போக்கோ.. வெறும் ரூ.13999 போதும்.. SONY கேமரா.. மாடல்?

மேலும், IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் பாடியுடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் மிட்-ரேஞ்ச் போனுக்கு நிகரான குவாலிட்டி மற்றும் அவுட்புட் எதிர்பார்க்கலாம். சியோமி ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi Hyper OS) மற்றும் லேட்டஸ்ட் ஆண்டார்ய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது.

ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு அவுட்புட் கொடுக்கும் ஆக்டோ கோர் 6என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (Octa Core 6nm MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப பர்ஃபாமென்ஸ் கொடுக்க 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடல் இருக்கிறது.

இதுபோக 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலும் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த மாடல்களில் மைக்ரோஎஸ்டி (microSD) பயன்படுத்தி கொள்ளலாம். இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போனின் சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட டூயல் ரியர் சிஸ்டம் (Dual Rear System) கிடைக்கிறது.

20 எம்பி செல்பீ ஷூட்டர் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. இந்த போக்கோவில் இன்பிராரெட் சென்சாரும் (Infrared Sensor) பேக் செய்யப்பட்டுள்ளது. டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோவிலும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் (Hi Res) போன்ற பட்டையை கிளப்பும் பீச்சர்கள் கிடைக்கின்றன.

டைப்-சி ஆடியோ கிடையாது, 3.5 எம்எம் ஆடியோ ஜாக் கிடைக்கிறது. ஆனால், டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் 5110mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. பிரீமியம் டிசைனில் லூனார் டஸ்ட் (Lunar Dust), லாவண்டர் ப்ரோஸ்ட் (Lavender Frost) மற்றும் ஆலிவ் ட்விலைட் (Olive Twilight) ஆகிய கலர்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது.

இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போனின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.14,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.16,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.1000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, ரூ.13,999 ஆரம்ப விலைக்கு இந்த போக்கோ போனை ஆர்டர் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
POCO M7 Pro 5G With 50MP Camera 8GB RAM Sale Under Rs 14000 in Flipkart Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X