மார்க்கெட்டே மிரள போகுது.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய POCO 5ஜி போன்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் அடுத்து போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G)எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது FCC தளத்தில் 2409FPCC4G என்ற மாடல் நம்பர் உடன் இந்த புதிய போக்கோ காணப்பட்டுள்ளது. அதேபோல் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போனின் படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. எனவே வரும் வாரங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.
போக்கோ எம்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO M7 Pro 5G Specifications): 1.5கே அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection)உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் சிப்செட் (MediaTek Dimensity 6100+ chipset)டன் இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போன் அறிமுகமாகும். மேலும். ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவரும். ஆனாலும் ஆண்டராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா கொண்டுள்ளது இந்த போக்கோ எம்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 256ஜிபி மெமரி, 8ஜிபி ரேம் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் போக்கோ எம்7 ப்ரோ போன் அறிமுகமாகும். குறிப்பாக போக்கோ எம்7 ப்ரோ 5ஜி மாடலின் சில விவரங்கள் தான் தற்போது வெளியாகி உள்ளது. கூடிய விரைவில் இதன் அனைத்து விவரங்களும் வெளியாகும்.மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி அம்சங்கள் (POCO X6 Neo 5G Specifications): 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் டிஸ்பிளே (Super AMOLED Display) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது இந்த போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் (1080×2400 பிக்சல்கள்) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
சக்திவாய்ந்த ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6080 6என்எம் (Octa Core MediaTek Dimensity 6080 6nm) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் மாலி ஜி 57 எம்சி 2 ஜிபியு (Mali G57 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போக்கோ போனை நம்பி வாங்கலாம்.
அதேபோல 108 எம்பி ப்ரோ கிரேடு மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி ஸ்மார்ட்போன். போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), நைட் மோட் (Night Mode), வாய்ஸ் ஷட்டர் (Voice Shutter), ஃபிலிம் ஃபில்டர்கள் (Film Filters), 3x இன்-சென்சார் ஜூமிங்உள்ளிட்ட கேமரா அம்சங்கள் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி மாடல். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு இதில் உள்ளது.
5000mAh பேட்டரி உடன் இந்த போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. மேலும் இன்பிராரெட் மற்றும் சைடு ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வசதி இதில் உள்ளது. அதேபோல் அஸ்ட்ரல் பிளாக், ஹொரைசன் ப்ளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்ச் ஆகிய நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,999 விலையில் வாங்க கிடைக்கிறது போக்கோ எக்ஸ்6 நியோ 5ஜி.
photo credit: 91mobiles


Click it and Unblock the Notifications