கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா? டிச.17-ல் மலிவு விலையில் வரும் புதிய POCO 5ஜி போன்கள்.. எந்த மாடல்?
போக்கோ நிறுவனம் அடுத்து போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G) மற்றும் போக்கோ சி75 5ஜி (POCO C75 5G) ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதி வெளியிட்டுள்ளது. அதாவது இந்த இரண்டு போக்கோ போன்களும் வரும் டிசம்பர் 17-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன்கள் மலிவு விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
அதுவும் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி மற்றும் போக்கோ சி75 5ஜி போன்கள் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய போக்கோ போன்களின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

போக்கோ எம்7 ப்ரோ 5ஜி அம்சங்கள் (POCO M7 Pro 5G specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் GOLED டிஸ்பிளே உடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2100 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது போக்கோ எம்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியும் உள்ளது. டூயல் சிம் கார்டு, யுஎஸ்பி டைப் சி போர்ட், மைக்ரோபோன் (microphone) மற்றும் ஸ்பீக்கர் கிரில் (speaker grille) போன் வசதிகளும் இந்த போனில் உள்ளன.
அதேபோல் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் சான்றிதழ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, போக்கோ எம்7 ப்ரோ 5ஜி போன் ரூ.10,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
போக்கோ சி75 5ஜி அம்சங்கள் (POCO C75 5G specifications): குவால்காம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 எஸ்ஒஎசி (Qualcomm Snapdragon 4s Gen 2 SoC) சிப்செட் உடன் போக்கோ சி75 5ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி இந்த போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போனில் சோனி கேமரா வசதி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். ஆனால் இந்த போனில் ஜியோ 5ஜி சேவையை பயன்படுத்த முடியும், ஏர்டெல் 5ஜி சேவையை பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டுள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது போக்கோ சி75 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் இந்த போனில் உள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த போக்கோ சி75 5ஜி போன் ரூ.9000 விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








