Home
Mobile

வாங்குனா இந்த Poco 5ஜி போன் வாங்கனும்.. 7000mAh பேட்டரி.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஆகஸ்ட் 13-ம் தேதி இந்தியாவில் போக்கோ எம்7 பிளஸ் (Poco M7 Plus) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது போக்கோ நிறுவனம். அதுவும் இந்த போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, சிப்செட், பேட்டரி உள்ளிட்ட முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

போக்கோ எம்7 பிளஸ் அம்சங்கள் (Poco M7 Plus Specifications): ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட் (Snapdragon 6s Gen 3 chipset) உடன் போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போக்கோ ஸ்மார்ட்போனில் மேம்பட்ட கேமிங் அம்சங்களும் உள்ளன.

வாங்குனா இந்த Poco 5ஜி போன் வாங்கனும்.. 7000mAh பேட்டரி..

6.9-இன்ச் LCD டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு உள்ளது. மேலும் டியூவி ரெயின்லேண்ட் லோவ் ப்ளூ லைட் சர்டிஃபிகேஷன் (TUV Rheinland Low Blue Light Certification) பெற்றுள்ளது இந்த போன்.

போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போக்கோ உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது.

குறிப்பாக 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான போக்கோ ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போக்கோ போனில் உள்ளது.

அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor)ஆதரவும் இருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்குனா இந்த Poco 5ஜி போன் வாங்கனும்.. 7000mAh பேட்டரி..

மேலும் 7000mAh பேட்டரி உடன் போக்கோ எம்7 பிளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

குறிப்பாக 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போக்கோ எம்7 பிளஸ் போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, போக்கோ எம்7 பிளஸ் போன் இந்தியாவில் ரூ.15,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M7 Plus specifications and price leaked ahead of August 13 launch: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X