வெளுக்குது விற்பனை.. ரூ.11,399 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் தளத்தில் போகோ எம்7 பிளஸ் 5ஜி (POCO M7 Plus 5G) ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக பேங்க் தள்ளுபடியுடன் அடிமட்ட விலைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைக்கு 7000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 18W ரிவர்ஸ் சார்ஜிங் மட்டுமல்லாமல், 12 ஜிபி ரேம், 50 எம்பி கேமரா, IP64 ரேட்டிங் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் சிப்செட் கொண்ட இந்த போகோ ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.13,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும் இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் நேரடி விலை குறைப்பு போக 6 ஜிபி ரேம் வேரியண்ட் ரூ.11,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ரூ.600 பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது.

ஆகவே, 11,399 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அதேபோல 8 ஜிபி ரேம் வேரியண்ட் விலை குறைப்பு போக ரூ.12,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.650 பேங்க் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஆகவே, இந்த வேரியண்ட்டை ரூ.12,349 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ஈஎம்ஐ சலுகையும் கொடுக்கப்படுகிறது.
போகோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (POCO M7 Plus 5G Specifications): இந்த போகோ ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் (2340 x 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 850 எச்பிஎம் மோட் மற்றும் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஹைப்பர் ஓஎஸ் (Hyper OS) கொடுக்கப்படுகிறது. பட்ஜெட் மடாலாக இருந்தும், 2 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் 4 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஆண்ட்ராய்டு 17 வரையில் அப்டேட் கிடைக்கும். 8 ஜிபி ரேம் மாடலிலும் 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கிடைக்கிறது.
இந்த போகோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் (Octa Core Qualcomm Snapdragon 6s Gen 3 6nm) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டில் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிடைக்கிறது. 50 எம்பி டூயல் ஏஐ ரியர் கேமரா (Dual AI Rear Camera) கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கு 2X இன்-சென்சார் ஜூமிங், டைனாமிக் ஷாட் (Dynamic Shot ), ஆட்டோ நைட் மோட் (Auto Night Mode), அல்ட்ரா எச்டி (UltraHD), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), போட்டோ டெப்த் கன்ட்ரோல் (hoto Depth Control) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. 1080p ரெசொலூஷனில் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
இதிலும் போர்ட்ராய்டு மோட், நைட் மோட், வாய்ஸ் ஷட்டர் போன்ற பீச்சர்கள் உள்ளது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. சைடு-பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Fingerprint Sensor), IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. குரோம் சில்வர், அக்வா ப்ளூ, கார்பன் பிளாக் கலர்களில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








