Home
Mobile

பரபரப்பை கிளப்பும் தீபாவளி சேல்.. ரூ.10,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

கடந்த மாதம் இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி (Poco M7 Plus 5G) ஸ்மார்ட்போன் மாடல் ரூ.12,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த போக்கோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பிளிப்கார்ட் தளத்தில் தற்போது நடைபெறும் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனையில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

பரபரப்பை கிளப்பும் தீபாவளி சேல்.. ரூ.10,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி..

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (Poco M7 Plus 5G specifications): 7000mAh பேட்டரி உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி வெளிவந்தது. எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5 எஸ்ஒசி சிப்செட் (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G SoC) வசதியுடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டை கொண்டுள்ளது இந்த போக்கோ ஸ்மார்ட்போன்.

ஆண்ட்ராய்டு 15 (Android 15) சார்ந்த ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) ஆதரவுகளுடன் இந்த போக்கோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6.9-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் போக்கோ எம்7 பிளஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 550 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இந்த போனில் உள்ளது. குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

பரபரப்பை கிளப்பும் தீபாவளி சேல்.. ரூ.10,999 பட்ஜெட்ல 7000mAh பேட்டரி..

போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + செகண்டரி கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. அதேபோல் இந்த போனின் எடை 217 கிராம் ஆகும். IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) ஆதரவு கொண்டுள்ளது இந்த போக்கோ போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Poco M7 Plus 5G with 7000mAh battery available under Rs.11000 in Flipkart Big Bang Diwali sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X