Home
Mobile

POCO ஆட்டமே இனிதான்.. ரூ.12349 க்கு 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 144Hz டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?

போகோ நிறுவனத்தின் போகோ எம்7 பிளஸ் 5ஜி (POCO M7 Plus 5G) ஸ்மார்ட்போனுக்கு நம்ப முடியாத தள்ளுபடி கொடுக்கப்பட்டு அடிமட்ட விலைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 7000mAh பேட்டரி மட்டுமல்லாமல், 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங் கொடுத்துள்ளது. மேலும், 144Hz டிஸ்பிளே கிடைப்பதால், விற்பனையில் மிரளவிட்டு வருகிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 16 சதவீத தள்ளுபடி விலைக்கு 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ரூ.13,499 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,150 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ரூ.1,2349 விலைக்கு இந்த போகோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

POCO ஆட்டமே இனிதான்.. ரூ.12349 க்கு 7000mAh பேட்டரி.. 50MP கேமரா!

போகோ எம்7 பிளஸ் 5ஜி அம்சங்கள் (POCO M7 Plus 5G Specifications)
6.9 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. 2340 x 1080 பிக்சல்கள் ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 850 நிட்ஸ் ஹை பிரைட்னஸ் மோட் மற்றும் 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இந்த டிஸ்பிளேவுக்கு கிடைக்கிறது. இந்த செக்மெண்ட்டில் பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாகவும் இது இருக்கிறது.

பஞ்ச்-ஹோல் டிசைனில் கிடைக்கிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுத்துள்ளது. 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card Support) கொண்ட மாடலாகவும் இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமராவை கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த போகோ எம்7 பிளஸ் 5ஜி இருக்கிறது.

ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) கொண் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 6என்எம் 5ஜி (Qualcomm Snapdragon 6s Gen 3 6nm 5G) சிப்செட் கொடுத்துள்ளது. 2 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் (Android OS Updates) மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கொடுக்கப்பட்டு உள்ளன. அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

33Wஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரியை இந்த போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. கூடுதலாக 18W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.4 எம்எம் தடிமன் மற்றும் 217 கிராம் எடை கொடுத்துள்ளது. 1600 சார்ஜிங் சைக்கிள்களை கொடுக்கிறது. பிறகும் 80 சதவீத பேட்டரி ஹெல்த் கிடைக்கும்.

சிங்கிள் சார்ஜில் 24 மணி நேரங்களுக்கான வீடியோ பிளேபேக்கை இந்த பேட்டரி கொடுக்கும். சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சாரை (Infrared Sensor) இந்த போக்கோ எம்7 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) கிடைக்கிறது.

குரோம் சில்வர் (Chrome Silver), அக்வா ப்ளூ (Aqua Blue) மற்றும் கார்பன் பிளாக் (Carbon Black) ஆகிய மூன்று கலர்களில் வாங்கி கொள்ள கிடைக்கிறது. 5ஜி (5G), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6) மற்றும் ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கனெக்டிவிட்டியை கொடுத்துள்ளது. மேலும், ஜிபிஎஸ் (GPS), குளோனாஸ் (GLONASS), யூஎஸ்பி டைப்-சி (USB Type-C) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
POCO M7 Plus 5G With 50MP Camera Available At 16 Percent Discount on Flipkart Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X